அவன
அவன் நினைத்திருக்கிறது.
ஆக, 1‘ஓர் இனப்பொருள்கள் பலவாதலே அன்றி, வேற்றினப் பொருள்களும் பலவாகத் தொடங்கின’
என்பதனைத் தெரிவித்தவாறு. இக்காதலுக்குக் கைதொட்டுக் கிருஷி பண்ணினபடி சொல்லுகிறது மேல் :
2விருத்தவான்களைக் காட்டிக் காணும் விருத்திபரர் ஆக்கிற்று இவரை.
கால சக்கரத்தான்
எம்மான் எம்பிரான் கண்ணனுக்கு - கையும் திருவாழியுமான அழகைக் காட்டி எனக்கு வேறு ஒன்றிலே நெஞ்சு
செல்லாதபடி செய்தலாகிய மஹோபகாரத்தைச்செய்து, 3‘கழிவதோர் காதலுற்றார்க்கும்
உண்டோ கண்கள் துஞ்சுதல்?’ என்னும்படி செய்த என் ஸ்வாமியான கிருஷ்ணனுக்கு. பகலை இரவு ஆக்க
வல்ல சக்கரமாதலின், ‘காலசக்கரம்’ என்கிறார். கால சக்கரம் - ‘காலத்தை நடத்துகின்ற
சக்கரம்’ என்றபடி. அன்றிக்கே, 4‘கலிகாலத்தில் பாஷண்டிகளால் கெடுக்கப்பட்ட
மக்கள் விஷ்ணுவாகிய சர்வேசுவரனைப் பூஜிக்கின்றார்கள் இல்லை,’ என்கிற காலத்திலும்,
இருள் தரு மா ஞாலத்திலும் இருளை ஓட்டி, 5அருளார் திருச்சக்கரமாய்த் திருக்கரத்திலே
விளங்கிக்கொண்டிருப்பவன் ஆதலின், ‘காலத்திற்குக் கட்டுப்பட்டிருக்குந்தன்மையைப்
போக்கும் சக்கரம்’ என்னுதல். சர்வேசுவரன் திருக்கரத்தைத் தான் பிரியாமல் இருத்தல்
போலே, திருவடிகளைத் தாம் பிரியாதபடியான ருசியை உண்டாக்கக்கூடிய திருவாழி என்பதனைத் தெரிவித்தபடி.
அவனுடைய திருக்கையிலே நின்ற அழகாலே மக்கள் சென்று காலிலே விழும்படி செய்யுமவன் என்பதாம்.
(5)
_____________________________________________________
1. ‘இவருடைய காதலானது,
ஒரே இனமான திரு ஆபரணங்கள் பல
வகையாகையேயன்றித் திருப்பரிவட்டம் கீர்த்தி தொடக்கமான
பல
இனப்பொருள்கள் ஆகவும் தொடங்கிற்று,’ என்றபடி.
2. ‘சக்கரத்தான்’ என்றதனைக்
கடாக்ஷித்து, ‘விருத்தவான்களை’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார். விருத்தம், சிலேடை :
வளையம், நடைவடி.
3. திருவிருத்தம். 97.
4. ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 1 : 41.
5. திருவிருத்தம், 33.
‘அருளார் திருச்சக் கரத்தால்
அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல்
நடாவுதிர்’
என்பது அப்பாசுரப்பகுதி.
|