க
காப்பாற்றுகின்ற. என்றது,
‘இவற்றை ஆபரணமாகக் கொண்டு அலங்கரித்து, உலகம் நோவுபடத் தான் அலங்காரம் அழியாதே
இருக்கை. அன்றிக்கே, ஆபத்திற்குத் துணைவனாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.
நாராயணனே -
1இப்படி வரையாமல் பாதுகாக்கவும் ‘இவன் நம்மைப் பாதுகாத்தான்’ என்று கைம்மாறு தேடி நெஞ்சாறல்
படவும் வேண்டாதபடி சம்பந்தம் இருக்கிறபடி, 2‘தாய் நம்மை வயிற்றிலே பாதுகாத்தாள்;
நாம் இவளுக்கு என் செய்வோம்?’ என்று நெஞ்சாறல்படுவார் இலரே அன்றோ? அதற்கு அடி, சம்பந்தம்;
அப்படியே அன்றோ அவனும்? 3‘தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்று இருத்தி
உய்யக்கொண்டவன்’ என்பதே அன்றோ ஆறு அங்கம் கூற அவதரித்த ஆலிநாடர் திருவாக்கு?
என்று என்று - கையும்
ஆழ்வார்களுமான அழகையும் காலத்திற்குத் தகுதியாக ஆபத்தில் துணையாயினமையையும், 4இவை
இல்லாவிடிலும் விட ஒண்ணாத சம்பந்தத்தையும் சொல்லி. ‘என்று என்று’ என்னும் அடுக்கு,
தனித்தனியே ஆழங்காற்பட்டமையைத் தெரிவிக்கிறது. ஓலம் இட்டு நான் அழைத்தால் - 5வலி
இழந்தவனான நான் கூப்பிட்டு அழைத்தக்கால். ‘ஓலமிட்டு’ என்றதனால் பரமபதத்திலே
இருந்தாலும் நிலை குலைந்து வரவேண்டும்படி பெருமிடறு செய்து கூப்பிடுகின்றமை போதரும். ஒன்றும்
_____________________________________________________
1. ‘நாராயணனே’ என்று சம்பந்தத்தை
இட்டு அமைப்பதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘இப்படி வரையாமல்’ என்று தொடங்கி.
2. ‘சம்பந்தம் இருந்தால்
நெஞ்சாறல் பட வேண்டாவோ?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘தாய் நம்மை’ என்று தொடங்கி.
3. ‘ஆயின், தாய் போன்று
பாதுகாப்பவனோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘தாயிருக்கும்’ என்று தொடங்கி.
இது, பெரிய
திருமொழி, 11. 6 : 6.
4. ‘நாராயணனே’ என்ற
சொல்லை நோக்கி, ‘இவை’ இல்லாவிடிலும்
விடவொண்ணாத சம்பந்தம்’ என்கிறார். ‘இவை, என்ற
சுட்டு, மேலே கூறிய
இரண்டனையும் சுட்டுகிறது.
5. ‘பாலனாய்
ஏழுலகு’ என்ற திருவாய்மொழியிலே பிரிவுத் துன்பம்
சொல்லுகையாலே, இங்கே ‘வலி இழந்தவனான நான்’
என்கிறார்.
|