|
பற
பறியுண்ணாநின்றது என்பாள்
“செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த” என்கிறாள். “செங்கனிவாய் நுகர்ந்தான்”,
“மண நோக்கம் உண்டான்” என்னக் கடவதன்றோ. செய்யவாயும் கருங்கண்ணும் பயப்புஊர்ந்த-1கடலும்
மலையும் குடியிருப்புமான இடங்கள் எல்லாம் பிரளய காலத்தில் ஒரே வெள்ளமாய் இருக்குமாறு போலே
எங்கும் ஒக்க வைவர்ண்யமேயாயிற்று.-ஒரே வெளுப்பு ஆயிற்று. 2விஷம் பரந்தாற்போலே
காணக் காண வண்டல் இட்டு வைவர்ண்யமானது பரப்பு மாறிற்று.
(2)
467
ஊர்ந்த சகடம் உதைத்த
பாதத்தன் பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன்
என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும்
அவனோடுஅன்றி ஓர்சொல்லில்லேன்
தீர்ந்த என்தோழி!
என்செய்யும் ஊரவர் கவ்வையே?
பொ-ரை :- ஊர்ந்து வந்த சகடாசுரனை உதைத்துக் கொன்ற
திருவடிகளையுடையவனும், சார்ந்து பூதனையின் முலையைச் சுவைத்த சிவந்த வாயினையுடையவனுமான கண்ணபிரான்
என் நிறையைக் கொள்ளைகொண்டான்; சென்றும் வந்தும் அவன் சம்பந்தமான வார்த்தைகளை ஒழிய வேறு
வார்த்தைகளையுடையேன் அல்லேன்; அறுதியையுடைய என் தோழீ! ஊராருடைய பழிச்சொல் என்ன காரியத்தைச்
செய்யும் என்கிறாள்.
வி-கு :-
தீர்ந்த-எல்லாவற்றையும் விட்டு நீங்கிய. “தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்’ என்பது
தொல்காப்பியம். தோழி ஊரவர் கவ்வை என் செய்யும் என்க.
_____________________________________________________
‘அவன் வாய் புகு’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘வாய் புகு சோறு’ என்றதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
“செங்கனிவாய்”
என்று தொடங்கி. இவ்விரண்டும், பெரிய திருமொழியில் முறையே,
3. 7 : 2.,
8. 10 : 1. பாசுரங்களாகும்.
1. “முன்செய்ய மாமை” என்றதனையும்
கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
‘கடலும் மலையும்’ என்று தொடங்கி. “பயப்பு” என்றதனை நோக்கி
‘ஒரே
வெளுப்பாயிற்று’ என்கிறார். ‘வெளுப்பு’ என்றது சிலேடை: வெள்ளம்
என்றும், வெளுத்தது என்றும்
பொருள்.
2. “ஊர்ந்த” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘விஷம் பரந்தாற்போலே’
என்று தொடங்கி. பரப்பு மாறிற்று-இடமில்லாதபடி
பரம்பிற்று.
|