|
ஜ
ஜீவன அதிருஷ்டத்தாலே தப்பின இத்தனை. 1இரண்டு
சகடத்தை இரண்டு அருகும் இழுத்து நடுவே தொட்டிலை இட்டு வளர்த்திப் போனாள் தாயார்; பாடி
காப்பாரே களவு காணுமாறு போலே, காவலாக வைத்த சகடமே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வந்ததாயிற்று.
அசேதனமான சகடத்தில் அசுரர்கள் ஆவேசித்து நலிவதாக ஊர்ந்து வந்ததித்தனை அன்றோ. அதுவும்
செய்வது எல்லாம் செய்து, இவனும் அகப்படுவது எல்லாம் அகப்பட்டு நின்றான்; திருவடிகளினுடைய
செயலாலே
தப்பின இத்தனை ஆதலின் ‘உதைத்த பாதத்தன்’
என்கிறாள். இவனை அடிகாத்துத் திரிந்ததித்தனை. முலை வரவு தாழ்க்கச் சீறி நிமிர்த்தத்
திருவடிகளுக்கு இலக்காய்த் துகளாய்ப் போயின இத்தனை ஆதலின் ‘உதைத்த பாதத்தன்’ என்கிறாள்
2“கிருஷ்ணன் முலைப்பாலை விரும்பினவனாய்க் கொண்டு திருவடிகளை மேலே
நிமிர்த்தான், அழுதான்” என்பது விஷ்ணு புராணம். 3நமக்குப் புகலான திருவடிகள்தாமே
நமக்கு விருப்பம் இல்லாதவைகளையும் போக்கித் தருமாயிற்று.
4சகடாசுரனைக் கொன்ற இது, பருவம்
நிரம்பிக் கம்சனைக் கொன்ற செயலோடு ஒக்கச் சொல்லலாம்படி
___________________________________________________
1. புறத்தே இருக்கக்கூடிய சகடம் உள்ளே இருப்பதற்குக்
காரணம் யாது?
அது ஊருகைக்குப் பிரசக்தி யாது? அசேதனமான அது ஊரக் கூடுமோ?
என்ன, அவற்றிற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘இரண்டு சகடத்தை’ என்று
தொடங்கி. வளர்த்திப் போனாள் - கண்
வளர்த்திப் போனாள். பாடி காப்பார்
- கிராமங்களைப் பாதுகாப்பவர்கள்; தலையாரிகள்.
2. முலை வரவு தாழ்க்கச் சீறியதற்குப் பிரமாணம்
அருளிச்செய்கிறார்
‘கிருஷ்ணன்’ என்று தொடங்கி.
“கதாசித் சகடஸ்யாத: சயாநோ மதுசூதந:
சிக்ஷேப சரணா ஊர்த்வம் ஸ்தந்யார்த்தீ ப்ரருரோத
ஹ”
என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 1.
3. திருவடிகள் அவனுடைய பகையைப் போக்கினமையைச்
சொன்ன இதனால்
பலித்த பொருளை அருளிச்செய்கிறார் ‘நமக்குப் புகலான’ என்று தொடங்கி.
4. பூதனையைக் கொன்றது முன்னே நடந்த செயலாக இருக்க, அதனைச்
சகடாசுரனைக் கொன்ற செயலுக்குப்
பின் ஈண்டு அருளிச் செய்வதற்குக்
காரணம் என்? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘சகடாசுரனைக்
கொன்ற இது’ என்று தொடங்கி. என்றது,
|