முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
105

யன

யன்றோ இதற்கு முன்பே பூதனையைக் கொன்ற செயல். சகடம் வந்து கிட்டினபோது சிலராலே நீக்கப்படலாம்; பூதனை தாய் வடிவுகொண்டு வந்து நலியப் புக்கால் அதற்குப் பரிஹாரம் இல்லையே அன்றோ, ஈன்றோரே நஞ்சு இட்டாற்போலே இருப்பது ஒன்றே அன்றோ. பேய் முலை சார்ந்து சுவைத்த செவ் வாயன் - பிள்ளைகள் முலை உண்ணப் புக்கால் தாய்மார்களுடைய முலைக்கீழே முட்டினவாறே பால் சுரக்கும், பின்னைப் பாலை உண்டு உபகாரத்தின் நினைவாலே முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்வார்கள்; அப்படியே, அவளும் தாயாய் வந்து முலை கொடுக்கையாலே இவனும் பிள்ளையாயே முலைக்கீழே முட்டி முலை உண்டு, உபகாரத்தின் நினைவாலே முகத்தைப் பார்த்து அதரத்தில் பழுப்புத் தோற்ற புன்முறுவல் செய்தாயிற்று முலை உண்டது. 1“மழலை மென்னகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே” என்னக் கடவதன்றோ. 2“உயிரை வற்ற வாங்கி உண்ட

____________________________________________________ 

  மேலே மேலே மிகக் கொடிய கம்சன் முதலானவர்களை அழித்து
  அச்செயல்களிலே ஈடுபடுத்தினபடியாலே, சகடாசுரனைக் கொன்ற செயலை
  நோக்க அதிக பாதகமாக இருக்கிற பூதனையைக் கொன்ற செயலைப்
  பின்னர் அருளிச்செய்கிறார் என்றபடி. பூதனை, மிகக் கொடிய பாதகி என்று
  தோற்றியிருக்குமளவன்றிக்கே, அவளால் வந்த பாதகச் செயல் மற்றையோரால்
  நீக்க முடியாதது என்று அருளிச்செய்கிறார் ‘சகடம் வந்து’ என்று தொடங்கி.

1. புன்முறுவல் செய்து முலை உண்டமைக்குப் பிரமாணம் காட்டுகிறார்
  “மழலை மென்னகை” என்று தொடங்கி.

  குழகனே! என்தன் கோமளப் பிள்ளாய்!
      கோவிந்தா! என்குடங் கையில் மன்னி
  ஒழுகு பேரெழில் இளம்சிறு தளிர்போல்
      ஒருகை யால்ஒரு முலைமுகம் நெருடா
  மழலை மென்னகை இடைஇடை அருளா
      வாயி லேமுலை இருக்கஎன் முகத்தே
  எழில்கொள் நின்திருக் கண்ணினை நோக்கம்
      தன்னையும் இழந்தேன் இழந்தேனே.

  இது, பெருமாள் திருமொழி.

2. “சுவைத்த” என்றதற்குப் பிரமாணம் காட்டுகிறார் “உயிரை” என்று தொடங்கி.

  முற்ற மூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து
  இற்ற கால்போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
  பெற்ற தாய்போல் வந்த பேய்ச்சி பெருமுலையூடு உயிரை
  வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே.

  இது, பெரிய திருமொழி.