|
ஆ
ஆகையாலே, அவனை ஒழிய
எனக்கு வேறு ஒரு சொல் இன்றிக்கே இருந்தது என்கிறாள் என்னுதல். இவள் இப்படிச் சொன்னவாறே
விலக்குகிற தோழி உகந்தாள், யாங்ஙனம்? எனின், ‘நாம் இவளை அவனோடு சேர்ப்பதற்குப் பட்டபாடும்,
அப்படிச் சேர்ப்பித்த நாமே இவளை மறப்பிக்க முயற்சி செய்தாலும் மறவாதபடி உட்புகுந்தவாறும்
என்னே! என்று உகந்தாள்; இவள், விலக்குகிற வார்த்தைகளை விட்டு இவள் மனத்தினைக் கண்டாள்
‘தீர்ந்த என் தோழி’ என்கிறாள்.
தீ்ர்ந்த என் தோழி
- தாய்மார் சொல்லுகிற நல்வார்த்தைகளை நீயும் சொல்லுகையாலே, ‘நீயும் அவர்களைப் போன்று
விலக்குகிறாய்’ என்று இருந்தேன், உன் நினைவு இதுவாகப் பெறுவதே! 1நீ நீயேயாம்படி
இருந்தாய் வர இரு என்கிறாள். 2“இராவணன் வரவிட்ட ஆள்” என்று ஐயம் உற்று இருந்தவள்,
“பெருமாள் பக்கல் நின்றும் வந்தவன்” என்று அறிந்த பின்பு அவனைக் கொண்டாடிற் போலே. என்றது,
“பெருமாளால் அநுப்பப் பட்டவனாயிருப்பதனாலே, ஓ வானர உத்தமனே! என்னுடன் இரஹசியமான சமாசாரங்களைச்
சொல்லுவதற்கும் தகுதியுள்ளவன் ஆகிறாய்” என்றாள் என்றபடி. 3“தோழி
___________________________________________________
நீ சொல்லுவது; ‘அவனை மற’ என்று
சொல்லுவது அவனை
நினைப்பூட்டுவதாயிருக்கிறது என்றபடி. ‘விலக்குகிற வார்த்தைகளை விட்டு
இவள்
மனத்தினைக் கண்டாள்’ என்றது, மனத்தொடு படாத வார்த்தைகள்
என்று தோழியின் நெஞ்சை
அறிந்தாள் என்றபடி.
1. ‘நீ நீயேயாம்படி
இருந்தாய்” என்றது, நான் என் நாயகன் விஷயத்தில்
ஈடுபட்டிருத்தலைக் கண்டு மகிழ்ச்சி
அடைந்திருத்தலன்றோ தோழியாகிய
உனக்கு ஸ்வரூபம்; ஆகையாலே, நீ நீயேயாம்படி இருந்தாய்
என்றபடி. வர
இரு - வந்து இரு.
2. முன்பு வெறுத்தவள்,
பின்பு ஆநுகூல்யத்தை அறிந்து கொண்டாடுவதற்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘இராவணன்
வரவிட்ட ஆள்’ என்று தொடங்கி.
பிராட்டி கொண்டாடின படியைக் காட்டுகிறார் ‘பெருமாளால்
அநுப்பப்பட்டவனாயிருப்பதனாலே’ என்று தொடங்கி.
“அர்ஹஸேச கபிசிரேஷ்ட
மயா ஸம்அபிபாஷிதும்
யத்யபி ப்ரேஷி தஸ்தேந
ராமேண விதிதாத்மநா”
என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 10.
பிராட்டி, திருவடியைப் பார்த்துக் கூறியது.
3. மேற்காட்டிய
சுலோகத்தில், “மயாஸம் அபிபாஷிதும், அர்ஹஸே”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
“தோழிமாருடனே”
|