|
ட
டாம்படி செய்தானாகில்,
1இனி அவன் என் செய்வான். முன்பு நீர்மையுடையவனாகச் சொல்லப்பட்டவன், இன்று
பழிக்கும்படி கடியன் ஆனானோ?
(4)
469
கடியன் கொடியன் நெடியமால்
உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி
மாயத்தன் ஆகிலும்
கொடியஎன் நெஞ்சம்
அவனென்றே கிடக்கும் எல்லே!
துடிகொள் இடை மடத்தோழி!
அன்னை என்செய்யுமே!
பொ-ரை :- கடியன், கொடியன், நீண்ட மால், உலகத்தைத்
தாவி அளந்த திருவடிகளையுடையவன், அறிதற்கு அரிய திருமேனியையுடைய மாயத்தையுடையவன் ஆகிலும்,
கொடிய என் மனம் அவன் என்றே கிடக்கும்; என்ன ஆச்சரியம்! துடியினது வடிவத்தைக் கொண்ட இடையினையும்
மடப்பத்தினையுமுடைய தோழீ! தாய் என்ன செய்ய மாட்டுவாள் என்கிறாள்.
வி-கு :-
முதல் இரண்டு அடிகளின் பொருள்களை வியாக்கியானத்திற்காணல் தகும். துடி-உடுக்கை.
ஈடு :- ஐந்தாம்
பாட்டு. 2“நீ அவனுக்கு நீர்மை இல்லை, அவன் அருள் அற்றவன்’ என்றாயாகிலும், அச்
சொல்லுக்கு ஒரு பிரயோஜனம் இல்லைகாண், அவன் குணம் இல்லாதவன் என்று நீ சொல்லுவது என்னை
மீட்கைக்காக அன்றோ, அதுவும் நான் அவனைப் பற்றுகைக்கு உறுப்பாகச் சொன்னாய் ஆயினாயித்தனை
என்கிறாள்.
கடியன் கொடியன் நெடிய
மால் உலகம் கொண்ட அடியன் 3அவன் குணம் இல்லாதவன் என்று சொல்லும்
______________________________________________________
1. ‘இனி அவன் என் செய்வான்’
என்றது, இனி அவன் என்ன செய்ய
வேண்டும் என்றபடி.
2. மேற்பாசுரத்தில்
“கடியனே” என்று ‘மறுத்தல்’ என்னும் மதத்தால் ‘அவன்
அருளற்றவன்’ என்று தோழி கூறியதனை
விலக்கினாள்; இங்கே, “கடியன்
ஆகிலும்’, என்று ‘உடன்படல்’ என்னும் மதத்தாலே அவள்
கூற்றை
விலக்குகிறாள் என்கிறார் ‘நீ அவனுக்கு’ என்று தொடங்கி. பிரயோஜனம்
இல்லாமையைக்
காட்டுகிறார் ‘அவன் குணம் இல்லாதவன்’ என்று
தொடங்கி.
3. “கடியன்” என்று தோழி
சொன்ன மாத்திரத்தை அநுவதியாமல், மேலும்,
“கொடியன்” என்பது போன்று வேறு சிலவற்றையும் கூறியதற்கு,
பாவம்
அருளிச்செய்கிறார் ‘அவன் குணமில்லாதவன்’ என்று தொடங்கி.
|