|
களுக
களுக்கு ஒன்றும் எஞ்சாதபடி
கொள்ளும் திருவடிகளையுடையவன்.
அறிவு அரு மேனி-கிட்டினால்,
‘இத்தலைக்கு எல்லாச் செல்வத்தையும் தர நினைக்கின்றானோ, எல்லாச் செல்வத்தையும் கொள்ளை
கொள்ள நினைக்கின்றானோ, என்று அறிய ஒண்ணாதபடியான 1வடிவையுடையவன். 2‘என்னுடைய
ஆத்மாவும் என்னுடைமைகளும் நீ இட்ட வழக்கு’ என்பாரைப் போலே சொல்லி ஆயிற்று இத் தலையில்
ஆத்மாவையும் மற்றைச் செல்வத்தையும் கொள்ளைகொள்வது. என்றது, தன்னையும் தன்னுடைமையையும் இவள்
இட்ட வழக்கு ஆக்கி, பின்னையாயிற்று இவளைத் தனக்கு ஆக்கிற்று என்றபடி. மாயத்தன்-‘நானும் என்னுடைமையும்
நீ இட்ட வழக்கு’ என்ற இவ்வார்த்தையை நினைத்து அதிலே நெஞ்சு மூழ்கியிருக்க, அவ்வளவிலே கண்களிலே
மணலைத் தூவி அகல வல்லவன். ஆகிலும்- 3நீ சொல்லிச் சொல்ல மாட்டாதவையும்,
சிசுபாலன் முதலானோர் சொல்ல மாட்டாதவையும் எல்லாம் நான் சொல்ல வல்லவள் அன்றோ அவை
விடுகைக்கு உறுப்பாகப் பெற்றேனாகில். கொடிய என் நெஞ்சம் - 4உல்லோகமாய்
உலகத்திற்கு வேறுபட்டதான என் நெஞ்சு. என்றது, நாட்டாருக்கு, குணம் பற்றுகைக்குப் பற்றாசாய்த்
தோஷம் விடுகைக்கு உடலாய் இருப்பது; அங்ஙனன்றிக்கே, குணஹாநிதன்னையே பற்றுகைக்கு உடலாகக்
கொள்ளும்படியான என் நெஞ்சம் என்றபடி. அவன் என்றே கிடக்கும்-5இத்தோஷங்கள்
அவன் உடைமைகள் அன்றோ என்று ஈடுபட்டுக் கிடக்கும் என்று
____________________________________________________
1. ‘வடிவையுடையவன்’ என்றது, ஸ்வபாவத்தை உடையவன் என்றபடி.
2. இங்ஙனம்
சொல்லுதற்குக் காரணம் என்? என்ன, விடை அருளிச்செய்கிறார்
‘என்னுடைய’ என்று தொடங்கி.’
3. “ஆகிலும் என் நெஞ்சம்
அவன் என்றே கிடக்கும்” என்று கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார் ‘நீ சொல்லி’ என்று
தொடங்கி.
4. ‘உல்லோகமாய்’
என்பதற்கு, உல்லோகம் ஆகையாலே என்று பொருள்
உரைத்துக்கொள்க. உல்லோகம் - உலகியலுக்கு
வேறுபட்டது.
5.
‘இத்தோஷங்கள் அவன் உடைமைகள் அன்றோ என்று ஈடுபட்டுக்
கிடக்கும்’ என்றது, குணங்கள்
பற்றுக்கோடாதற்கு உண்டான காரணம்
தோஷங்களுக்கும் உண்டே அன்றோ என்றபடி.
|