|
தன
தன்றோ. நன்று; 1“இது,
குணாதிக விஷயத்தில் சொல்லுகிற வார்த்தையாகில், ‘கரும்பின் புழு கரும்பு அன்றி உண்ணாது’ என்ன
வேண்டவோ? என்னில், ‘அவனுக்கு இந்நன்மைகள் இல்லையேயாகிலும் நான் அவனை விட மாட்டேன்’ என்கிற
பாவபந்தத்தில் உறைப்புத் தோற்றும்படி மாறாடிச்சொல்லுகிறதல்லது, குணாதிக விஷயத்தில் இது
இருப்பதாமோ என்க. 2என் ஸ்வரூபத்தைப் பார்த்தால் நான் உன்னை விட மாட்டேன்,
நீ நீ அன்றிக்கே இருந்தாலும் என்னால் விடப் போகாது.
(5)
470
அன்னைஎன் செய்யில்என்?
ஊர்என் சொல்லில்என்? தோழிமீர்!
என்னைஇனி உமக்கு
ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன்
வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன்
வாசுதேவன் வலையுளே.
பொ-ரை :- தோழியர்களே! முற்பட்டவர்களான நித்திய
சூரிகளுக்குத் தலைவனும் வளம் பொருந்திய துவாரகை என்னும் திவ்விய தேசத்திற்கு அரசனும் மணிவண்ணனுமான
வாசுதேவனுடைய வலைக்குள்ளே அகப்பட்டேன்: ஆதலால், இனி, தாயானவள் எந்தக் காரியத்தைச் செய்தால்
என்ன? ஊரிலுள்ள மக்கள் எந்தப் பழிச் சொற்களைக் கூறினால் என்ன? என் பக்கல் உங்களுக்கு
ஆசை வேண்டாம் என்கிறாள்.
வி-கு :-
என்னை, என்பது: வேற்றுமை மயக்கம். வண்ணம்-நிறம். வசுதேவன் குமரன்; கண்ணபிரான்.
____________________________________________________
“வேம்பின் புழு வேம்பன்றி
உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன்
சேவடியன்றி நயவேன்”
என்பது, பெரிய திருமொழி, 11. 8
: 7.
1. பொதுவான சங்கையை
அநுவதித்துப் பரிஹரிக்கிறார் ‘இது, குணாதிக
விஷயத்தில்’ என்று தொடங்கி. ‘அவனுக்கு இந்நன்மைகள்
இல்லையேயாகிலும்’ என்றது, கடன்மல்லைத் தலசயநத்துக் கிடந்த
கரும்பான தான் வேம்பாய் இருந்தானேயாகிலும்
என்றபடி. ‘மாறாடி’
என்றது, இனிமையை மாறாடி விரசமாகச் செல்லுகிறது என்றபடி.
2.
“வேம்பின் புழு” என்ற பாசுரத்திலுள்ள “அடியேன் நான்” என்பதற்குப்
பொருள் அருளிச்செய்கிறார்
‘என் ஸ்வரூபத்தை’ என்று தொடங்கும்
வாக்கியத்தால், “உன் சேவடி அன்றி நயவேன்” என்றதற்கு
மறுதலை
ரூபமாகப் பொருள் அருளிச்செய்கிறார் ‘நீ நீ அன்றிக்கே’ என்று
தொடங்கி. என்றது,
நிரசதிசய போக்கியனான நீ விரசனாய் இருந்தாலும்
என்றபடி.
|