முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
130

இவளுக

இவளுக்கு. வலையுள் . . . அகப்பட்டேன் - 1அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின நோக்கிலும் புன்முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது. 2ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடாநிற்க, எம்பெருமானார் திருக்கண்களைக் காட்டியருளினார், “கமலக்கண் என்னும் நெடுங்கயிறு” எனக் கடவதன்றோ. அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக்கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்.

(6)

471

    வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
    அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான்தன்னைக்
    கலைகொள் அகல்அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
    தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.


    பொ-ரை :-
கலையைக் கொண்டிருக்கின்ற அகன்ற அல்குலையுடைய தோழீ! வலையிலே என்னையும் அகப்படுத்திச் சிறந்த மனத்தையும் அழைத்துக்கொண்டு அலைகளையுடைய கடலிலே பள்ளி கொண்டிருக்கின்ற அம்மானாகிய ஆழிப்பிரான்தன்னை, இந்தப் பெண்களுக்கு முன்பு நம் கண்களாலே கண்டு தலையாலே வணங்கவும் ஆகுங் கொல்லோ என்கிறாள்.

    வி-கு : . . .
ஆழிப்பிரான்தன்னைக் கண்டு வணங்கவும் ஆகும் கொல்? என்க. கலை-புடைவை. மேகலாபரணமுமாம். தலையில்-தலையால். வேற்றுமை மயக்கம். தையலார்-பெண்கள்.

    ஈடு :-
ஏழாம் பாட்டு. 3அவனிடத்தில் குணம் இன்மையைச் சொல்லுகிற பெண்கள் வாய் அடங்கும்படி நாம் அவன் வரக் கண்டு, அந்த உபகாரத்துக்காகத் தலையாலே வணங்க வல்லோமே என்கிறாள்.

____________________________________________________

1. ‘அந்தப் பொதுவானது’ என்றது, மேலே கூறிய அழகு சௌலப்யம்
  முதலியவற்றைக் குறித்தபடி. “வண் துவராபதி மன்னன்” என்றதனை
  நோக்கிப் ‘பொதுவானது’ என்கிறார்.

2. “வலை” என்பது, நோக்கையும் புன்முறுவலையும் காட்டுவதற்கு ஐதிஹ்யம்
  காட்டுகிறார் ‘ஆழ்வார்’ என்று தொடங்கி. அதற்குப் பிரமாணங்
  காட்டுகிறார் “கமலக்கண்” என்று தொடங்கி. இது, நாய்ச்சியார் திருமொழி,
  14 : 4.

3. “நம் கண்களால் கண்டு தலையில் வணங்கவும் ஆம் கொல்” என்பதனைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.