முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
132

கிறாள்; இவை சேரும்படி என்? என்னில், தாய்மார் சொல்லுகிற வார்த்தையை இவர்களும் சொல்லுகையாலே “தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்றாள். இங்ஙனம் பேசுவாரை விட்டுத் “தீர்ந்த என் தோழி” என்னலாம்படி நெஞ்சு கலந்து ஒரு நீராய் இருக்கிற உயிர்த் தோழியைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறாள். நம் கண்களால் கண்டு-1இப்போது இவள் ஹிதம் சொன்னாளேயாகிலும், காணும்போது நான்கு கண்களாலே காணும் காண்பது; அல்லது, இரண்டு கண்களாலும் காண வேண்டாள். தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே-‘பிரிந்த இடத்தில் தன்னுடைய பெண் தன்மைக்குப் போரும்படி அவன்தானே வரப் பார்த்திருந்திலள், அவனும் வரவு தாழ்த்தான்’ என்று பழி சொல்லுகிற இவர்கள் முன்பே அவனும் வந்து, அவன் வந்த உபகாரத்துக்குப் பிரதி உபகாரமாகத் தலையாலே வணங்கப் பெற வல்லமோ! 2இத்திருவாய்மொழியை ஆழ்வான், இராஜேந்திர சோழனில் சந்தியா சதஸ்ஸிலே நிர்வஹித்துக்கொண்டிருக்க, ‘ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்பார் நூறு வயது போந்திருப்பார் ஒருவர், நடுங்க நடுங்க எழுந்து நின்று, ‘ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?’ என்ன, ‘பெறும், சிஷ்டாசாரம் உண்டு காணும்; ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் 3“தலையாலே தொழுதலையும் செய்வாய்”

______________________________________________________

1. ஹிதம் சொல்லுமது இவளுக்கும் உண்டேயன்றோ, அங்ஙனம் இருக்க, “நம்
  கண்களாற் கண்டு” என்று அவளுக்கும் காட்சியிலே சேர்க்கை உண்டாகச்
  சொல்லலாமோ? என்ன, ‘இப்போது’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். என்றது, ஹிதம் சொல்லுமது மனத்தொடு படாததாய்,
  நாயகன் விஷயத்தில் நாயகிக்கு உண்டான ஈடுபாடு தனக்கு உடன்பாடு
  ஆகையாலே, காட்சியில் இவளுக்கும் சேர்க்கை உண்டாகச் சொல்லலாம்
  என்றபடி. ‘நான்கு கண்களாலே’ என்கையாலே, புருஷகாரம் முன்னாகச்
  சேவிக்க வேண்டும் என்பது ஸ்வாபதேசம். இதனால், ‘வேதம் வல்லார்களை’
  முன்னிட்டே அவனைக் காண்பார் என்றபடி.

2. பிரிவுத் துன்பத்தோடு இருக்கிற தலைமகள் வணங்குவாளோ? என்கிற
  சங்கையிலே, கூரத்தாழ்வான் அருளிய விடையை அருளிச்செய்கிறார்
  ‘இத்திருவாய்மொழியை’ என்று தொடங்கி. சந்தியா சதஸ்-மாலை நேரத்தில்
  கூடிய சபை.

3. “கௌசல்யா லோகபர்த்தாரம் சுஷுவேயம் மனஸ்விநீ
   தம் மமஅர்த்தே சுகம் பிருச்ச சிரஸா ச அபிவாதய”

 
என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 56.