முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
133

என

என்று அநுஷ்டித்தாள் காணும்’ என்று அருளிச்செய்தார். 1“கர்மத்தினாலேயே பல சித்தியைப் பெற்றார்கள் ஜநக குலத்திலுள்ளவர்கள்” என்கிறபடியே, ஜநக குலத்திலுள்ளவர்களிலும் ஆசாரத்தில் மேற்பட்டார் இலர் அன்றோ.

    2
“மநஸ்விநீ கௌசல்யா லோக பர்த்தாரம் யம் சுஷீவே-நாட்டில் பெண்கள் ‘இங்கு இருக்கும் நாள்களுக்கு நமக்கு ரக்ஷகனாய்ப் பின்பு நரகத்தில் புகாதபடி விலக்குவதற்கும் ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெறுவர்கள்; அங்ஙன் அன்றிக்கே, என் மாமியார் தன் நெஞ்சில் உண்டான பரந்த நோக்கத்தாலே, ‘உலகத்துக்கெல்லாம் ரக்ஷகனாக வல்லான் ஒரு பிள்ளையைப் பெற வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெற்றார்; அவர் நினைவு தப்பலாமோ? அந்த உலகத்துக்குள்ளே இருக்கிற ஒரு பெண் அல்லளோ நான். இனி, ‘நாட்டில் பெண்கள் கணவன்மார்கள் சமர்த்தர்களானபோது ஆதரித்தும், சமர்த்தர்கள் அல்லரானபோது உபேக்ஷித்தும் போரக்கடவர்களாய் இருப்பர்கள் என்பது ஒன்று உண்டு; நீ எல்லா நிலைகளிலும் அவரை ஆதரித்துப் போருவாய்’ என்று அவர் என்னைக் குறித்துச் சொல்லிவிட்டார்; நானும் அப்படியே செய்து போராநிற்க, கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே, தாம் என்னுடைய ரக்ஷணத்தில் நெகிழ நின்றது அவர் நினைவு குறைவுபட்டது ஆகவோ என்று சொன்னேன் என்று சொல்லு. தம் மம அர்த்தே சுகம் பிருச்ச - எங்களுடைய ரக்ஷணத்துக்கு நாங்கள் பிரார்த்தித்துப் பெற வேண்டுவது ஒன்று இல்லையே அன்றோ, அதுவும் அவர் நினைவில் உண்டு ஆகையாலே; இனி,

____________________________________________________

  ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும்
  மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத்
  தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம்
  வேண்டி னாள்தொழுது என்று விளம்புவாய்

  என்பது, கம்பராமாயணம்.

1. பிராட்டி செய்தது சிஷ்டாசாரமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘கர்மத்தினாலே’ என்று தொடங்கி.

  “கர்மணைவ ஹி சம்சித்திம் ஆஸ்திதா ஜனகாதய:
  லோகசங்க்ரஹமேவாபி சம்பஸ்யந் கர்தும் அர்ஹசி”

  என்பது, கீதை 3 : 20.

2. மேலே எடுத்துக் காட்டிய ஸ்ரீ ராமாயண சுலோகத்திற்குப் பொருள்
  அருளிச்செய்கிறார் ‘மநஸ்விநீ’ என்று தொடங்கி. கிண்ணகம்-
  வெள்ளப்பெருக்கு. குமிழி-அப்பெருக்கு உண்டாகுமிடம்.