முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
134

1க

1கிரமப் பிராப்தி பற்றாமையால் உள்ளதே அன்றோ இப்போது படுகிறது. தாம் உளராக எங்களுடைய ரக்ஷணம் தப்பாதே அன்றோ; ஆனபின்பு, தம்முடைய உண்மையை 2ஆகாசிக்கையன்றோ இனி எங்களுக்கு உள்ளது; ஆகையாலே, அங்குத்தைக்கு ஒரு குறையும் இல்லையே என்று கேட்டேன் என்று சொல்லு. சிரசா அபிவாதய ச-நாட்டார் அளவு அன்றிக்கே, தாம் விசேடித்து என்னைக் கைப் பிடிக்கையால் உண்டான வாசியை யான் பெறாத பின்பு, நாட்டாரைப் போலவாகிலும் பெறக் குறை இல்லை அன்றோ. இனி நாட்டர் பெறுவது பெறப் பார்த்தால், அவர்கள் தம் பக்கல் செய்யுமத்தையும் செய்யவேணுமே அன்றோ; ஆனபின்பு, நான் என் தலையாலே தம் திருவடிகளிலே வணங்கினேன் என்று நீ எனக்காக அவர் திருவடிகளிலே விழு என்றும் அருளிச்செய்தாள்.”

    3
‘இதுதான் ஊடுதலால் உண்டாகும் சீற்றம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ, அபேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ’ என்ன, ‘மேலே, திருவடி வந்தபோது பிரணய ரோஷத்தாலே வந்த சிவிட்குத் தோற்றச் சொன்ன வார்த்தைகள் அடையமாறும்படி குளிர அவன் வார்த்தை சொல்ல, பின்பு திருவுள்ளத்திலே ஓர் ஆறுதல் பிறந்து, பெருமாளைச் சேராமையால் உண்டான குறைபாடும் கிடக்க அருளிச்செய்கிற பாசுரம்’ என்று அருளிச்செய்தார்.

(7)

472

        பேய்முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
        போய்முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறுஅட்ட
        தூமுறுவல் தொண்டைவாய்ப் பிரானைஎந் நாள் கொலோ?
        4நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.

_________________________________________________

1. தன் பேற்றுக்குக் காரணமாக அஞ்சலி செய்தல் கூடுமோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘கிரமப் பிராப்தி’ என்று தொடங்கி. கிரமப்
  பிராப்தி-கிரமத்திலே அடைதல்.

2. ஆசாசிக்கை-மங்களாசாசனம் செய்தல்.

3. இதனால், மனைவிக்குரிய பிரணய ரோஷத்தால் அன்றிக்கே, “அஹம்
  சிஷ்யாச தாஸீச” என்கிறபடியே, சேஷத்வத்துக்குத் தகுதியாகச் சொன்னாள்
  என்றபடி.

4. “யாமுறுகின்றது” என்பது, இப்பொழுது உள்ள பாடம், “நாமுறுகின்றது”
  என்ற பாடமே வியாக்கியானத்திற்கும், மோனைக்கும் பொருந்துவதாம்.