முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
14

நிர்வாஹமும் என்பக்கலேயிருந்து செய்யுமத்தனையாய் விட்டது என்னுதல். 1அன்றிக்கே, உபயவிபூதி ஐஸ்வர்யமும் என் பக்கலிலே ஆய்விட்டது என்னுதல். 2இதனைச் சிற்றின்பத்திலே ஈடுபாடு உடைய ஒருவன், தான் உகந்த விஷயத்தையே எல்லா ஐஸிவரியங்களுமாக நினைத்திருக்குமாறு போன்று கொள்க. 3“உன்னாக முற்றும் அகத்தடக்கி” என்றாரே இவரும்.

(2)

445

    உள்ளன மற்றுளவாப் புறமேசில மாயஞ் சொல்லி
    வள்ளல் மணிவண்ணனே! என்றென்றே உன்னையும் வஞ்சிக்கும்
    கள்ள மனந்தவிர்ந்தே உன்னைக் கண்டுகொண் டுய்ந் தொழிந்தேன்
    வெள்ளத் தனைக்கிடந்தாய்! இனி உன்னைவிட் டென்கொள்வனே?

   
பொ - ரை :- மனத்திலே உள்ளவை உன்னை ஒழிந்த மற்றைய விஷயங்களாக இருக்க, புறத்திலே வள்ளலே! மணிவண்ணனே! என்று என்று சில பொது வார்த்தைகளைச் சொல்லி உன்னையும் வஞ்சிக்கின்ற மனத்திலே உள்ள வஞ்சனை நீங்கி உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தேன்; திருப்பாற்கடலிலே ஆதிசேஷசயணத்திலே கிடந்தவனே! இனி, உன்னைவிட்டு வேறு எதனைப் பற்றுவேன்? என்கிறார். என்றது, வேறு ஒன்றனையும் விரும்பேன் என்றபடி.

    வி-கு :-
உள்ளன - விணையாலனையும் பெயர். ‘மற்று’ என்னும் இடைச்சொல் ‘பிறிது’ என்னும் பொருளில் வந்தது. சொல்லி வஞ்சிக்கும் மனம் என்க. உய்ந்தொழிந்தேன்: ஒரு சால்.

_______________________________________________

1. நான்காவது பொருளுக்குக் கருத்து, “அந்தாமத் தன்பு செய்து”
  என்கிறபடியே, உபய விபூதியிலும் செய்யும் விருப்பத்தை என்னிடத்திலேயே
  செய்கிறான் என்பது.

2. உபய விபூதி ஐஸிவரியங்களும் இவருடைய திருவுள்ளமேயாக இருக்கக்
  கூடுமோ? என்ன, அதற்கு விடையும் பிராமணமும் அருளிச்செய்கிறார்
  ‘சிற்றின்பத்திலே’ என்று தொடங்கி.

3. “உன்னாக முற்றும்” என்பது திருவாய். 4. 3. 3. என்றது, “கோவை வாயாள்”
  என்ற திருவாய்மொழியிற் கூறியவாறே பொருந்தும் என்றபடி.