முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
142

அவ

அவ்வோலக்கத்திலே வந்தாலோ நான் சொல்லுவது; என் கையிலே வழியடையப்படப் புகுகிற பாடு பார்ப்பாயாக.

    ஆம் கோணைகள் செய்து-என்னாலான மிறுக்குக்களை எல்லாம் செய்யக் கடவேன். கோணைகள் - மிறுக்குக்கள். 1என்றது என் சொல்லியவாறோ? எனின், நான் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே, ‘நம் குணநிஷ்டர்படி இது அன்றோ’ என்று குணங்கொண்டாடி அதிலே செலவு எழுதக் கடவன்; ‘அன்று, நான் உன்னைப் பெறுகைக்குச் சாதந அநுஷ்டானம் பண்ணுகிறேன்’ என்னக் கடவேன். அன்றிக்கே, நான் கையும் மடலுமாகச் சென்றவாறே அஞ்சி எதிரே புறப்பட்டு நிற்கக் கடவன், அப்போதாக அவன் காலிலே குனியக் கடவன். 2“வட்டிக்குமேல் வட்டி ஏறின கடன் போலே” என்னும்படி தொட்டுவிடக் கடவேன். 3“தலையாலே வணங்கின அந்தப் பரதாழ்வானுடைய வார்த்தை என்னால் செய்யப்படவில்லை” என்று புண்படும்படி செய்யக் கடவேன். என்றது, பிள்ளை தலையாலே இரந்த காரியத்தை மறுத்துப் போந்தோம் என்னும்படி செய்யக் கடவேன் என்றபடி. 4நான் இதனைச் செய்தால், அவர் தம் மனிச்சு அழியாமைக்காக, ‘தம்மோடு

_________________________________________________

 

1. “கோணைகள்” என்ற பன்மையின் பொருளினை விவரிக்கிறார் ‘என்றது,
  என் சொல்லியவாறோ? எனின்,’ என்ற தொடங்கி. ‘நம் குண நிஷ்டர்படி
  இது அன்றோ’ என்றது, அழகு முதலிய குணங்களிலே ஈடுபட்ட நிஷ்டர்கள்
  கண நேரமும் பிரிவு பொறுக்க மாட்டாதபடி இது அன்றோ? என்றபடி.

2. காலிலே குனிந்தால் அது அவனுக்கு மிறுக்காக இருக்குமோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘வட்டிக்கு’ என்று தொடங்கி.

  “கோவிந்தேதி யதா அக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசிநம்
   ருணம் பிரவிருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி”

  என்பது, பாரதம் உத்யோகபர். 58:22. இது, கிருஷ்ணன் கூறியது.
  தொட்டுவிடுதல்-ஈடுபடுத்துதல்.

3. மேலதற்கே வேறும் ஒரு பிரமாணம் காட்டுகிறார் ‘தலையாலே’ என்று
  தொடங்கி.

  “மாம் நிவர்த்தயிதும் ய : அஸௌ சித்ரகூடம் உபாகத:

   சிரசா யாசத: தஸ்ய வசனம் ந க்ருதம் மயா”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 24:19. ஸ்ரீராமபிரான் திருவார்த்தை.

4. காலிலே குனிந்ததுக்கும் ஈச்வரன் செலவு எழுதினபடியை இரண்டு
  விதமாகக் காட்டுகிறார் ‘நான் இதனைச் செய்தால்’ என்றது முதல்,
  ‘உடம்பு பெறுகைக்காகச் செய்கிறேன் என்னக் கடவேன்’