முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
144

பின்பு, இனி, ஒன்றை நினைத்து ஒன்றைச் சொல்லுகிறது என்?’ என்று பார்த்து அது தன்னையே சொல்லுகிறாள்.

(9)

 474

    யாமடல் ஊர்ந்தும் எம்ஆழி அங்கைப் பிரானுடைத்
    தூமடல் தண்ணத் துழாய்மலர் கொண்டு சூடுவோம்
    யாமடம் இன்றித் தெருவுதோறு அயல் தையலார்
    நாமடங் காப்பழி தூற்றி நாடும் இரைக்கவே.


    பொ-ரை :-
மடம் முதலான குணங்கள் ஒரு சிறிதும் இன்றித் தெருக்கள்தோறும் அயல்பெண்கள் நாக்கும் மடங்காமலே பழிகளைத் தூற்ற நாடும் கூப்பிடும்படியாக, யாம் மடலை ஊர்ந்தாயினும் எம்முடைய சக்கரத்தைத் தரித்த அழகிய கையையுடைய எம்பெருமானுடைய பரிசுத்தமான இதழையுடைய குளிர்ந்த அழகிய திருத்துழாய் மலரைச் சூடக் கடவோம் என்கிறாள்.

    வி-கு :-
எம் ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணம்துழாய் மலரை, தையலார் பழிதூற்ற நாடும் இரைக்க மடம் யா இன்றித் தெருவுதோறும் யாம் மடல் ஊர்ந்தும் சூடுவோம் என்க. இனி, தெருவுதோறு தையலார் தூற்ற எனக் கூட்டலுமாம். யா என்பது, அஃறிணைப் பன்மை வினாப்பெயர். யாவை அல்லது, எவை என்பது பொருள்.

    “மடல் ஊர்ந்தும்” என்றதனானே, ஊராமை உணர்தல் தகும்.

    ஈடு :-
பத்தாம் பாட்டு. 1உலகம் எல்லாம் கலக்கம் உறும்படி மடல் ஊர்ந்தாகிலும், தனக்குமேல் ஒன்று இல்லாததான இனிமையையுடையவனைக் காணக் கடவேன் என்கிறாள்.

    யாம் மடல் 2ஊர்ந்தும்-செய்யக்கடவது அல்லாததனைச் செய்தேயாகிலும். என்றது, “என்னை அழைத்துக் கொண்டு போவாராயின் அச்செயல் அவருக்குத் தக்க

_________________________________________________

1. “நாடும் இரைக்க, யாம் மடல் ஊர்ந்தும், எம் ஆழி அங்கைப் பிரான்”
  என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “ஊர்ந்தும்” என்ற உம்மையின் பொருளை அருளிச்செய்கிறார் ‘செய்யக்
  கடவது” அல்லாததனை’ என்று தொடங்கி. “யாம்” என்றதற்குக் கருத்து
  அருளிச்செய்கிறார் ‘என்னை அழைத்துக்கொண்டு’ என்று தொடங்கி.

  “சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந:
   மாம் நயேத் யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய சத்ருசம் பவேத்”

 
என்பது, ஸ்ரீராமா. சுந். 39:30.