|
யங
யங்களும் எல்லாம் அழிய
அன்றோ புகுகின்றன; 1‘ஒருவன் உளனாகில் ஆசைப்பட்டவள் இப்படிப் பட இருக்குமோ,
ஆன பின்னர் நிரீஸ்வரங்காண் உலகம்’ என்னும்படி செய்கிறேன். 2அவனோடே கலந்த
என் வார்த்தை ஒழிய, அடி இல்லாத வேதம் சொன்ன வார்த்தைகளைக் கேட்பர்களோ? 3பிரமேய
சிரேஷ்டமானத்தை அழித்தேன், இனிப் பிரமாண சிரேஷ்டமானது தானே நில்லாதே அன்றோ. 4‘ஆசைப்பட்டார்க்குப்
பலம் இதுவான பின்பு இனி உபாசனத்துக்குப் பலம் இல்லை’ என்று கைவாங்கி நாஸ்திகராம்படி உலகினரனைவரையும்
செய்கிறேன். நாடும் இரைக்க யாம் மடல் ஊர்ந்தும்-5நாட்டார் சொல்லும் பழிதானே
தாரகமே அன்றோ. “ஊரவர் கவ்வை எருவாக” என்றாளே, அதிலே அன்றோ வேர் ஊன்றித் தரிப்பது.
(10)
475
இரைக்குங் கருங்கடல்
வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள்
பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி
ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு
வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.
________________________________________________
1. அழியும்படி எப்படி?
என்ன, ‘ஒருவன் உளனாகில்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
2. வேதம் சொல்லுவதை விட்டு,
தம் வார்த்தையைப் பிரமாணமாகக்
கொள்ளுவர்களோ உலகத்தார்? என்ன, ‘அவனோடே கலந்த’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
3. வேத வாக்கியங்களை அழிக்கப்
போமோ? என்ன, ‘பிரமேய சிரேஷ்டம்’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
பிரமேயம்-பிரமாணங்களால்
அறியப்படுகின்ற பொருள். பிரமேய சிரேஷ்டம்
- சர்வேச்வரன். பிரமாண சிரேஷ்டம்-வேதம். என்றது,
அந்த ரங்கையான
நான் இப்படிப் பிரமேய வஸ்துவை அழிக்கையாலே, அவனைப் பற்றிக்
கூறுகின்ற பிரமாணங்களும்
அப்ரமாணங்களாகிவிடும் என்பது கருத்து.
4. உபாசனங்களைப் பற்றிக்
கூறுகின்ற வாக்கியங்களை அழிக்கும்படி எப்படி?
என்ன, ‘ஆசைப்பட்டார்க்கு’ என்று தொடங்கி அதற்கு
விடை
அருளிச்செய்கிறார்.
5. “நாடும் இரைக்க” என்பதற்கு,
ஈச்வர விஷயமாகப் பழி சொல்லுவார்கள்
என்று, இதுகாறும் அருளிச்செய்து, இனி, நாயகி விஷயமாக
வேறும் ஒரு
கருத்து அருளிச்செய்கிறார் ‘நாட்டார்’ என்று தொடங்கி. இவ்வாக்கியத்துக்கு,
“அயல் தையலார் நா மடங்காப் பழி
|