|
New Page 2
பொ-ரை :-
ஒலிக்கின்ற கரிய கடல் போன்ற நிறத்தையுடையவனான
கண்ணபிரானை, வாசனை பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர்
அருளிச்செய்த நிரை நிரையாக அமைந்திருக்கின்ற அந்தாதியான ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள்
இப்பத்துத் திருப்பாசுரங்களையும் சொல்ல வல்லவர்களுக்குத் தாங்கள் தாங்கள் இருக்கின்ற ஊர்கள்
எல்லாம் வைகுந்த மா நகரமேயாகும் என்றவாறு.
வி-கு :-
இரைத்தல் - ஒலித்தல். விரை - வாசனை. நிரை-வரிசை. அந்தாதி-முதற்செய்யுளின் அந்தமானது,
அடுத்த செய்யுளின் ஆதியில் அமையும்படி பாடுவது. அந்தம்-ஈறு. ஆதி-முதல். “அந்தம் முதலாகத் தொடுப்பது
அந்தாதி” என்பது, இலக்கணம். ’வைகுந்தம் - அழிவில்லாதது; பரமபதம்.
ஈடு :-
முடிவில், 1இந்தத் திருவாய்மொழி கற்க வல்லார்கள் இருந்த தேசத்தே அவ் வெம்பெருமான்
தானே வந்து எப்பொழுதும் சேர்ந்திருப்பான் என்கிறார்.
இரைக்கும் கருங்கடல்
வண்ணன் - 2அனந்தாழ்வான் பணித்தாராக நஞ்சீயர் வந்து பட்டரிடத்தில் 3“‘வில்லைக்
கொண்டு வா, ஆசீவிஷத்திற்கு ஒத்த பாணங்களையும் கொண்டு வா’ என்றபோது கடல் கீழ்மண்கொண்டு
மேல் மண் எறிந்தாற்போலேயாயிற்று, இவள் ‘மடல் ஊர்வன்’ என்ற துணிவைக் கேட்டு அவன்தன்
சர்வாதிகத்வம் கலங்கினபடி” என்று அருளிச்செய்தார். வண்ணன்-ஸ்வபாவத்தையுடையவன் என்றபடி.
இரைக்குங் கருங்கடல் வண்ணன் - ஓதம் கிளர்ந்த கடல் போலே சிரமஹர
________________________________________________
என்னைத் தூற்றவும், நாடும் என்னை
இரைக்கவும், அதுவே தாரகமாக
மடல் ஊர்தும் என்பது கருத்து. நாட்டார் பழி தாரகமாமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் “ஊரவர் கவ்வை” என்று தொடங்கி.
இது, இத்திருப்பதிகத்தில்
நான்காவது திருப்பாசுரம்.
1. பின் இரண்டு அடிகளைத்
திருவுள்ளம்பற்றி அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. “நாடும் இரைக்க யாம்
மடல் ஊர்ந்தும்” என்று மேலே கூறியவர், இங்கு,
“இரைக்கும் கருங்கடல் வண்ணன்” என்று அருளிச்செய்வதற்குக்
கருத்து
அருளிச்செய்கிறார் ‘அனந்தாழ்வான்’ என்று தொடங்கி.
வந்து-திருநாராயணபுரத்தில் நின்றும்
வந்து.
3. “சாபம் ஆநய ஸௌமித்ரே
சராந் ச ஆசீவிஷோபமாந்
சாகரம் சோஷயிஷ்யாமி
பத்ப்யாம் யாந்து பிலவங்கமா:”
என்பது, ஸ்ரீராமா. யுத். 21
: 22.
|