|
ஆபத
ஆபத்திலே உதவும் தன்மையனுமாய்
எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க, அவைதாம்
பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல்
முதலியவைகளிலே 1ஒருப்பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்கவேண்டுமளவாய், அது தன்னைப்
பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்; 2“விஷஸ்யதாதா-இத்தனை நற்சரக்குத்
தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ? மே-கிடைத்தால்தான் எனக்கு இது சம்பவிக்குமோ? சஸ்த்ரஸ்ய
வா-விஷம் போன்று சிறிதுபோது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத்தான் தருவார்
உண்டோ? வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற்கொலைக்குச்
சாதனமானதைத்தான் தருவார் உண்டோ?” 3இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே,
4‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத் திருப்பாற்கடலிலே வந்து
சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க
_________________________________________________
திருவுள்ளம்பற்றி, ‘பிரளய ஆபத்திலே’
என்று தொடங்கியும், “இம்
மண்ணளந்த” என்றதனைத் திருவுள்ளம்பற்றி, ‘எல்லாப் பொருள்களையும்’
என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.
1. ஒருப்பட்டவர்-சீதாப்பிராட்டி.
‘அது தன்னைப் பெறுகை’ என்றது, “மாயும்
வகை அறியேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
2. பிராட்டி அப்படி முடியத்
தேடினாளோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘விஷஸ்யதாதா’ என்று தொடங்கி.
“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம்
விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி
விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி
கஸ்சித் சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி
ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந்.
28 : 25.
வி்ஷஸ்ய தாதா - விஷத்தையாவது
கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்
எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும்
பாபியான
எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்.
சஸ்த்ரஸ்ய வா -
ஆயுதத்தையாவது. வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-இராக்ஷசனுடைய
வீட்டில்.
3. மேலே, ‘மடல் ஊரப் பெறுகையைப்
போன்று தேட்டமாய்’ என்ற
வாக்கியத்தோடு, ‘இப்படி முடிகை’ என்று தொடங்கும் வாக்கியத்தைச்
சேர்த்துப் பொருள் காண்க.
4. “யோகு
செய்த பெருமானை” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘நாம் சர்வ
ரக்ஷகர் ஆகையாலே’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.
|