|
New Page 1
முயற்சியுள்ளவராய்
இருந்தோம்; கிராமப்பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க; அவன்
சர்வர்க்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சியுள்ளவனாகில், கிரமப் பிராப்தி பற்றாமல்
பதறுகிறோமித்தனை, நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குணஞானத்தாலே
தரித்தாராகச் செல்லுகிறது இத்திருவாய்மொழி.
476
ஊரெல்லாம் துஞ்சி
உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர்
நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம்
பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன்
ஆவிகாப்பார் இனியே.
பொ-ரை :-
ஊரிலேயுள்ள மக்கள் எல்லாரும் உறங்கி,
உலகம் எல்லாம் செறிந்த இருளாகி, நீர் என்று பேர் பெற்றவை எல்லாம் தெளிந்து ஒரே நீண்ட
இரவாகி நீண்டு விட்டது; உலகங்கள் எல்லாவற்றையும் பிரளய காலத்தில் புசித்த நம் பாம்பணையான்
வருகின்றான் இலன்; தோழீ! வலிய வினைகளைச் செய்த என்னுடைய உயிரை இனிக்காப்பவர்கள்
யார்? என்கிறாள்.
வி-கு :-
துஞ்சவும் இருளாகவும் தேறவும் இக்காலம் நீள் இரவாக நீண்டது என்க. துஞ்சுதல் - உறங்குதல். ஆல்
- அசைநிலை. அன்றி, ஆகையாலே என்று பொருள் கோடலுமாம்.
இத்திருவாய்மொழி,
தரவு கொச்சகக் கலிப்பா.
ஈடு :- முதற்பாட்டு.
1பிரளய ஆபத்திலே வந்து உதவினவன், என்னை விரஹநோயாகிய பிரளயம் கோக்க, வந்து
உதவாத பின்னர், இனி, நான் பிழைத்திருத்தல் என்பது ஒரு பொருள் உண்டோ? என்று தன் ஜீவனத்திலே
நசை அறுகிறாள்.
ஊர் எல்லாம்
துஞ்சி-2ஊரவர் கவ்வை தாரகமாக மடல் ஊர இருந்தோம், இனி யார் பழி தாரகமாக நாம்
____________________________________________________
1. “பார் எல்லாம் உண்ட”
என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ஊர் எல்லாம்
உறங்கினால் தனக்கு வந்தது யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘ஊரவர் கவ்வை’ என்று
தொடங்கி.
|