முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
158

உண

உண்டு போலே காணும்; 1பிரளயத்தில் சிலர் மடல் எடுக்கப் புக்கு அதுவும் மாட்டாத நிலை உண்டாகி, அன்று உதவி செய்தது. என்றது, தங்கள் தங்களால் போக்கிக் கொள்ள ஒண்ணாதபடியான ஆபத்து வந்தால் உதவுமவன் என்றபடி. நம் பாம்பு அணையான் - திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவன். என்றது, உகந்தார்க்கு உடம்பு கொடுக்குமவன் என்றபடி. 2ஆக, சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்தியசூரிகள் படியும் இல்லையாயிற்று, சம்சாரிகள் படியும் இல்லையாயிற்றே நமக்கு! என்கிறாள். 3நித்தியசூரிகளை நித்திய அநுபவம் செய்விக்கும்; சம்சாரிகளுக்கு விருப்பம் இல்லாதிருக்கவும் தான் அறிந்ததாக ஆபத்தையுடையரானவாறே வந்து ஆபத்தைப் போக்குவான் தன்னுடைய சம்பந்தத்தாலே. 4தன்னோடு கலந்து, கூப்பிடுகைக்கு வேண்டுவது கொடுத்தபடியாலே ‘நம்’ என்கிறாள்.

    வாரானால் - வயிற்றிலே வைத்துக் காக்க வேண்டா, உடம்போடே அணைய வேண்டா, வந்து முகம் காட்ட அமையுமே அன்றோ. 5“உதிக்கின்ற சூரியன் ஆனவன், உலகம் எல்லாவற்றிலும் உள்ள இருளைப் போக்குவதைப் போன்று, பெருமாள் பார்க்கப்பட்டவுடனேயே நமது வருத்தத்தைப் போக்குவார்” என்னக்கடவதன்றோ. இனி-இவ்

_____________________________________________________

1. “பார்” என்று அஃறிணைச்சொல்லால் அருளிச்செய்ததற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘பிரளயத்தில்’ என்று தொடங்கி.

2. “பார் எல்லாம் உண்டவன், நம் பாம்பணையான்” என்ற இரண்டு
  விசேஷணங்கட்கும், பாவம் அருளிச்செய்கிறார் ‘ஆக’ என்று தொடங்கி.

3. அவர்கட்கு இவன் செய்வன யாவை? என்ன, செய்வனவற்றை
  அருளிச்செய்கிறார் ‘நித்தியசூரிகளை’ என்று தொடங்கி.

4. இந்த நிலையிலும் முகம் காட்டாதிருக்க ‘நம்’ என்பான் என்? என்ன,
  ‘தன்னோடு’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  ‘கூப்பிடுகைக்கு வேண்டுவது’ என்றது, அன்பினை; அல்லது
  ஈடுபாட்டினையுமாம்.

5. முகம் காட்டினவாறே துக்கம் போமோ? என்ன, அதற்குப் பிரமாணத்தோடு
  விடை அருளிச்செய்கிறார் ‘உதிக்கின்ற’ என்று தொடங்கி.

  “த்ருஷ்ட ஏவஹி நஸ்ஸோகம் அபநேஷ்யதி ராகவ:
   தமஸ் ஸர்வஸ்ய லோகஸ்ய சமுத்யந் இவ பாஸ்கர:”

 
என்பது, ஸ்ரீராமா. அயோத். 83 : 9.