முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
161

ணாதபடி செறிந்திருக்கை. 1இரவுக்கும் இருளுக்கும் வேற்றுமையை நினையாமையாலே, இருளை ‘இரவு’ என்கிறாள். நீண்டதால் - ஒரு முடிவு காண ஒண்ணாது.

    காவி சேர் வண்ணன் - 2“அலர்ந்த கருநெய்தல் இதழ் போன்ற நிறத்தையுடையவர்” என்கிறபடியான நிறத்தையுடையவன். என்றது, இருளோடு ஒரு கோவையான நிறம் என்றபடி. 3இருள் அன்ன மா மேனி அன்றோ. 4கறுப்பு உடுத்து வருவாரைப் போன்று வரலாமே அன்றோ. என் கண்ணன்-கம்சன் காவலாக வைத்த தீயோர் கண்படாதபடி இருளிலே வந்து உதவினவன். 5நள்ளிருட்கண் வந்த எந்தை பெருமானாரே அன்றோ. வாரானால்-6தாமசப் பிரகிருதிகளை அழிக்க வருமவன் தம்ஸ்ஸீதன்னையே அழிக்க வந்தால் ஆகாதோ? 7“வந்தானாகில் அப்போதே

___________________________________________________

 

1. இப்படிச் செய்வது இருள் ஆகையாலே, ‘ஓர் வல் இருள்’ என்ன
  வேண்டாவோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இரவுக்கும்’
  என்று தொடங்கி.

 

2. “புல்லேந்தீவர பத்ராபம் சதுர்பாஹும் உதீக்ஷ்யதம்
   ஸ்ரீவத்ஸவக்ஷ ஸம்ஜாதம் துஷ்டாவ ஆநகதுந்துபி:”

  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 8.

3. யானும்என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல்வினையைக்
  கானும் மலையும் புகக்கடிவான் - தானோர்
  இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த
  அருளென்னும் தண்டால் அடித்து.

  என்பது, பெரிய திருவந். 26.

4 “காவிசேர் வண்ணன்” என்று இப்படிச் சொல்லுவதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘கறுப்புடுத்து’ என்று தொடங்கி. கறுப்பு உடுத்து வருவார்
  - நகரிசோதனைக்காக மாறுவேடம் பூண்டு இரவில் வருகின்ற அரசர்கள்.

5. தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண்
  வந்த எந்தை பெருமானார் மருவிநின்ற ஊர்போலும்
  முந்தி வானம் மழைபொழியும் மூவாஉருவின் மறையாளர்
  அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார்வீதி அழுந்தூரே.

  என்பது, பெரிய திருமொழி.

6. தாமசப் பிரகிருதிகள் - கம்சன் முதலானோர். தமஸ்ஸு-இருள்.

7. வந்தால் பலம் எது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘வந்தானாகில்’ என்று தொடங்கி. அதற்குக் காரணம் யாது? என்ன, ‘பகற்
  கண்டேன்” என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். “பகற்
  கண்டேன்” என்பது, இரண்டாம் திருவந். 81.