|
478
478
நீயும் பாங் கல்லைகாண்
நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி
ஊழியாய் நீண்டதால்
காயும் கடும்சிலை என்காகுத்தன்
வாரானால்
மாயும்வகை அறியேன்
வல்வினையேன் பெண்பிறந்தே.
பொ-ரை :- நெஞ்சமே! நீயும் அநுகூலமாய் இருக்கின்றாய்
இல்லை, நீண்ட இரவும் குறையும் காலமாயிராமல் கல்பமாக நீண்டுவிட்டது; பகைவர்களை வருத்துகின்ற
கொடிய வில்லையுடைய என் காகுத்தனும் வருகின்றான் இலன்; வில்வினையேனாகிய யான் பெண்ணாகப்
பிறந்ததனால் இறப்பதற்குரிய வகையை அறிகின்றிலேன் என்கிறாள்.
வி-கு :-
நெஞ்சமே பாங்கு அல்லை, இரவும் நீண்டது, காகுத்தன் வாரான், வல்வினையேன் பெண் பிறந்து
மாயும் வகை அறியேன் என்க. பிறந்து - பிறந்ததனால். காகுத்தன் - ஸ்ரீ ராமபிரான்; ககுத்தன் வமிசத்தில்
பிறந்தவன்.
ஈடு :- மூன்றாம்
பாட்டு. 1எல்லாத் துக்கங்களையும் போக்கும் தன்மையனான ஸ்ரீ ராமபிரானும் வருகின்றிலன்,
பரதந்திரப்பட்டவள் ஆகையாலே முடியவும் விரகு அறிகின்றிலேன் என்கிறாள்.
நெஞ்சமே! நீயும்
பாங்கு அல்லை காண் - 2கங்கையின் அக்கரையைச் சேர்ந்த அன்று, இளையபெருமாளைப்
பார்த்து, ‘பிள்ளையாய், நீயும் படைவீடு ஏறப் போ’ என்றாரே அன்றோ, ‘வனவாசம் இவரை ஒழியவும்
தலைக்கட்டலாம் என்று மயங்கி;’ அப்படியே, இவரும் தம் திருவுள்ளத்தைப் பார்த்து, ‘நீயும்
பாங்கல்லை காண்’ என்கிறார். 3“இம்மை
_____________________________________________________
1. “காயும் கடுஞ்சிலை காகுத்தன்”
என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. மீண்டும் “நீயும் பாங்கல்லை
காண்” என்றதற்கு, ஒரு திருஷ்டாந்தத்தோடு
பாவம் அருளிச்செய்கிறார் ‘கங்கையின்’ என்று தொடங்கி.
படைவீடு-
யோத்யா நகரம். “பாங்கல்லைகாண்” என்றது, பாங்கு அன்றிக்கே ஒழிந்தாய்
காண் என்றபடியாய்,
இதனால், உன்னைக் கொண்டு காரியம் இல்லை என்று
உபேக்ஷிக்கின்றாள் என்றபடி.
3. “பாங்கு அல்லை காண்”
என்கிறது என்? மனத்தினை ஒழிய ஒரு காரியம்
உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இம்மை’ என்று
தொடங்கி.
“மனஏவ மநுஷ்யாணாம் காரணம்
பந்தமோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கி முக்த்யை
நிர்விஷயம் மந:”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6.
7 : 28.
|