முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
164

மறு

மறுமைகளுக்குக் காரணம் மனமே” என்கிறபடியே, நெஞ்சைக்கொண்டே அன்றோ எல்லாம் பெற இருக்கிறது, அப்படி இருக்கச் செய்தேயும், இன்னாப்பாலே சொல்லுகிறார். நீள் இரவும் ஓயும்பொழுது இன்றி ஊழியாய் நீண்டது-1முதலிலே நெடிதான இரவானது, அதற்குமேலே, ஒரு முடிவு காண ஒண்ணாதபடி இராநின்றது. என்றது, அடி காண ஒண்ணாதபடியுமாய், முடிவுக்கும் ஓர் எல்லை காண ஒண்ணாதபடி இராநின்றது. 2முடிவு காண ஒண்ணாதிருக்கச் செய்தேயும் அடியற்று இருப்பன உண்டே அன்றோ, இது அப்படி இருக்கிறது இல்லை. நின்றவிடத்தில் நின்றும் கால் வாங்கக் கூடியதன்றிக்கே இருத்தலின் ‘ஓயும் பொழுதின்றி’ என்கிறாள். ‘சாத்தன், கூத்தன்’ என்பது போன்று சில பெயர்களையுடையவர்களாய், அவர்கள் தாங்கள் ஜீவிக்கப் புக்கவாறே சிறுபேர் தவிர்ந்து ‘சோழக்கோனார்’, ‘தொண்டைமானார்’ என்று பட்டப் பெயர் பெற்று வாழுமாறு போன்று, இரவு என்ற பெயர் நீங்கிக் ‘கல்பம்’ என்னும் பெயரையுடைத்தாகா நின்றது என்பாள் ‘ஊழியாய்’ என்கிறாள். அது தனக்கும் ஓர் முடிவு உண்டே அன்றோ, அதுவும் இல்லையாயிற்று இதற்கு என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.

    காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால்-ஒருத்தியுடைய 3நெடிதானே இரவைப் போக்குவதற்காக வில்லை

__________________________________________________

1. “நீள்” என்றும், “ஓயும் பொழுதின்றி” என்றும் விசேடித்ததற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘முதலிலே’ என்று தொடங்கி.

2. முடிவில்லாமை சொன்னபோதே, அடி காண ஒண்ணாமையும் பெறப்படும்
  அன்றோ? அங்ஙனமிருக்க, “நீள் இரவு” என்று விசேடிக்க வேண்டுமோ?
  என்ன, “முடிவு காண” என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  என்றது, பிரத்வம்சாபாவத்திற்கு (அழிவு பாட்டபாவம்) முடிவின்றிக்கே
  இருக்கச்செய்தேயும் அடி உண்டாயிருக்குமே அன்றோ, அதனை நோக்கி
  விசேடிக்கிறது என்றபடி. அடியற்றிருப்பன-அடி உண்டாயிருப்பன. “நீளிரவு”
  என்று, ‘அடிகாண ஒண்ணாது’ என்றபோதே, முடிவு காண ஒண்ணாமையும்
  பெறப்படுமே அன்றோ? அங்ஙனம் இருக்க, “ஓயும் பொழுதின்றி” என்று
  விசேடிக்க வேண்டுமோ?  எனின், பிராகாபாவ (முன் இன்மை) வேறுபாட்டின்
  பொருட்டு விசேடிக்கிறார் என்க.

3. ‘நெடிதான இரவை’ என்றது, நெடிதான பிரிவாகிய வியசனத்தை என்றபடி.