முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
167

அவர

அவர் வரவிட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச்செய்ய, ‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ, அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகிலன்றோ குற்றமாவது’ என்று, அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து, பின்னையுந்தான், ‘அவரைப் பிரிந்து பத்து மாதங்கள் ஆயினவே, இவ்வளவும் முடிந்து போகாமல் தரித்திருந்ததன்றோ தேவரும்’ என்பது தனக்குக் கருத்து என்னுமிடம் தோற்ற இருந்தான் திருவடி; அதுவோ உனக்கு நினைவு! வாராய், நாட்டார்க்கு, மாதா என்றும் பிதா என்றும் உடன் பிறந்தார் என்றும் பந்துக்கள் என்றும் பல தலையாக இருக்கையாலே அன்பானது எங்கும் பாலிபாய்ந்திருக்கும்; பெருமாள் அங்ஙன் அன்றிக்கே, எல்லார்பக்கல் செய்யும் அன்பையும் என்பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே, எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்; தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏறவரக்கொண்டு தண்ணீர்ச்சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று, அவர் இப்படி வரக்கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று, அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்; 1அவரைக் கண்ட பிற்றைநாள் நான் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது என்றாளே அன்றோ. “தூத” - முன்பு, “வாநர” என்பது போன்று சொல்லிப்போந்தவள், இப்போது அவர்பக்கல் உண்டான சிவிட்கு இவ்வளவும் ஏறிப் பாய்ந்து, அவர் வரவிட வந்தவன் அன்றோ நீயும் என்றாளே அன்றோ.

_____________________________________________________

  “ந ச அஸ்ய மாதா ந பிதா நச அந்ய: ஸ்நேஹாத்
  விஸஷ்டோஸ்தி மயா ஸமோ வா
  தாவத் ஹி அஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம்
  ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 30.

      இந்தச் சுலோகத்தில் “தாவத் ஜிஜீவிஷேயம்” என்று ஜீவனத்திற்கு
  எல்லை சொன்னதற்குத் தகுதியாகச் சுலோகத்திற்கு அவதாரிகை
  அருளிச்செய்கிறார் ‘பிராட்டி’ என்று தொடங்கி.

1. ‘அவரைக் கண்ட பிற்றைநாள்’ என்றது, என்னை உபேக்ஷிக்கைக்கு உடலான
  அவருடைய மானச வியாபாரத்தை அறிந்த பிற்றை நாள் என்றபடி.