முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
168

வல

வல் வினையேன் பெண் பிறந்தே மாயும் வகை அறியேன் - தன் இச்சைக்கு வசப்பட்ட மரணமாம்போது ஆண்பிறந்த சக்கரவர்த்தி வீடுமன் முதலானோர்களாக வேணுமாகாதே: 1ஞானமுடையவர்களாதல் சுவதந்திரர்களாதல் செய்ய வேணும். அறிவிலிகளான பெண் பிறந்தார்க்கு நினைத்தபடி முடியப் போமோ.

(3)

479

        பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
        ஒண்சுடரோன் வாரா தொளித்தான் இம்மண் ணளந்த
        கண்பெரிய செவ்வாய்நம் காரேறு வாரானால்
        எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பார்ஆர் என்னையே?


    பொ-ரை :-
பெண்ணாகப் பிறந்தவர்கள் அடைகின்ற பெரிய துன்பத்தைக் காண மாட்டேன் என்று சூரியன் வராமல் ஒளித்துக் கொண்டான்; இந்த மூவுலகத்தைத் தன் திருவடியால் அளவிட்ட, பெரிய கண்களையும் சிவந்த வாயினையுமுடைய நம் கார் ஏறு வருகின்றானிலன்; எண்ணுதற்கும் மிக்கதாயுள்ள மனத்தின் நோயை என்னைத் தீர்ப்பார் யார்? என்கிறாள்.

    வி-கு :-
என்று ஒளித்தான் என்க. அளந்த காரேறு என்க. பசுவைப் பாலைக் கறந்தான் என்பது போன்று, நோயை என்னைத் தீர்ப்பார் யார் என இரண்டு செயப்படுபொருள் வந்தது. அன்றி, என்னுடைய நோயைத் தீர்ப்பார் யார்? என வேற்றுமை மயக்கமாகக் கோடலுமாம்.

    ஈடு :-
நான்காம் பாட்டு. 2கண்டார்க்குப் பொறுக்க ஒண்ணாதபடி வியசனம் செல்லாநிற்க, வரையாதே காப்பாற்றும் ஸ்ரீ வாமநனும் வருகின்றிலன்; என்னுடைய மனத்தின் துன்பத்தைப் போக்குவார் யார்? என்கிறாள்.

    பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று - பரதந்திர ஜன்மம் ஆகையாலே முடிந்து போகவும் பெறாமல், மிருதுத் தன்மையையுடையவர்களாகையால்

______________________________________________________

1. ஞானமுடையவர்கள்-வீடுமன் முதலானோர். சுவதந்திரமுடையவர்கள்-தசரத
  சக்கரவர்த்தி முதலானோர்.

2. “ஒண்சுடரோன் வாரா தொளித்தான்” என்றதனை நோக்கி, ‘கண்டார்க்கு’
  என்று தொடங்கியும், “இம்மண்ணளந்த” என்றதனை நோக்கி ‘வரையாதே’
  என்று தொடங்கியும், “எண்பெரிய சிந்தை நோய்” என்றதனை நோக்கி
  ‘என்னுடைய’ என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.