|
என
என்னைக் காத்தருளும்பொருட்டுக்
கண்வளர்ந்தருளின பின்பு. உன்னை விட்டு-1நான் விட்ட அன்றும் என்னை விட மாட்டாதே
இருக்கிற உன்னை ஒழிய. என் கொள்வனே-2பச்சை கொண்டு பலவேளையிலே நிஷ்பலங்களாய்
இருக்கும் விஷயங்களைப் பற்றவோ? 3ஆராதிக்குமிடத்தில் வருந்தி ஆராதிக்கத் தக்கவராய்,
வருந்தி ஆராதித்தாலும் கிடைப்பது ஒன்றும் இல்லாதவர்களாய் இருப்பவர்களைப் பற்றவோ?
(3)
446
என்கொள்வன் உன்னைவிட் டென்னும்
வாசகங் கள்சொல்லியும்
வன்கள்வ னேன் மனத்தை வலித்துக்
கண்ண நீர்கரந்து
நின்கண் நெருங்க வைத்தே
எனதாவியை நீக்ககில்லேன்
என்கண் மலினமறுத்து என்னைக்கூவி
யருளாய் கண்ணனே!
பொ-ரை :-
‘கண்ணனே! உன்னைவிட்டு
வேறு என்ன பிரயோஜனத்தைக் கொள்வேன் என்கிற வார்த்தைகளைச் சொல்லியுங்கூட, கொடிய கள்வனேனான
நான் விஷயங்களினின்றும் மனத்தை மீட்டுக் கண்ணநீரையும் மாற்றி மனத்தை நின்பக்கலிலே செறியச்செய்து
என் சரீரத்தினின்றும் என் உயிரைப் பிரிக்கமாட்டுகின்றிலேன்; என்னுடைய சரீர சம்பந்தத்தை
நீயே போக்கி என்னைக் கூவி அருள வேண்டும்’ என்கிறார்.
வி-கு :- உன்னை
விட்டு என் கொள்வன் என்னும் வாசகங்கள் என்க. வலித்தல் - மீட்டல். மலினம் - பாவம்.
ஈடு :- நான்காம்பாட்டு.
4‘பொய்யே கைம்மை சொல்லி’ என்றும், ‘சில கூத்துச் சொல்ல’ என்றும், ‘உள்ளன
_______________________________________________
1. “வெள்ளத்து அணைக்கிடந்தாய்
உன்னைவிட்டு” என்று கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார் ‘நான் விட்ட அன்றும்’ என்று தொடங்கி.
2. மேலே, “மணிவண்ணனே”
என்றதற்கு மறுதலையாகக் கருத்து
அருளிச்செய்கிறார் ‘பச்சைகொண்டு’ என்று தொடங்கி. பச்சை -
காணிக்கை.
விஷயங்கள்-பெண்கள்.
3. “வெள்ளத்தணைக்
கிடந்தாய்” என்றதற்கு மறுதலையாக வேறும் ஒரு
கருத்து அருளிச்செய்கிறார் ‘ஆராதிக்குமிடத்தில்’
என்று தொடங்கி. ஒன்று
மில்லாதவர்கள்-வேறு தெய்வங்கள்.
4. “பெற்றொழிந்தேன்”,
“கண்டுகொண்டொழிந்தேன்” என்று முன்னும் பின்னும்
பிரீதியாக இருக்க, இப்பாசுரத்திலும் மேற்பாசுரத்
|