|
அன
அன்றோ; 1அவனுடைய
படியிலே இழிந்தார்க்கே அன்றோ இது உள்ளது.
(4)
480
ஆர் என்னை ஆராய்வார்?
அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே
நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனிநம்
கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால்
வல்வினையேன் பின்நின்றே.
பொ-ரை :- தாய்மார்களும் தோழிமார்களும் இவள் தன்மையாதாக
இருக்கின்றது என்று ஆராயாமல், நீண்ட இரவு முழுதும் தூங்குகின்றார்கள்; மேகம் போன்ற நிறத்தையுடைய
நம் கண்ணபிரானும் வருகின்றான் இலன்; என்னை ஆராய்கின்றவர்கள் யாவர்? கொடிய தீவினையேனாகிய
எனக்குப் பின்னே நின்று பெயரானது என்னை முடிய ஒட்டுகின்றது இல்லை என்கிறாள்.
வி-கு :-
நீர் - நீர்மை. துஞ்சுவர் வாரான் ஆதலால், என்னை ஆராய்வார் ஆர்? என்க. வல்வினையேன்
பின் நின்று பேர் என்னை மாயாது என்க. மாய்தல்-மறைதல், அழிதல்.
ஈடு :- ஐந்தாம்
பாட்டு. ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராயகின்றிலர்கள்; அவர்கள் உதவாதபோது
உதவும் கிருஷ்ணனும் வருகின்றிலன்; பெயரளவில் நிற்கின்றவள் ஆனேன் என்கிறாள்.
என்னை ஆராய்வார்
ஆர் - 2“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்
_____________________________________________________
1. ‘அவனுடைய’ என்று தொடங்கும்
வாக்கியத்திற்குக் கருத்து, பிராப்பிய
புத்தியாக இழிந்தவர்கட்குத் தரித்திருக்கப் போகாது
என்றபடி.
அவனுடையபடி-அவனுடைய திவ்விய மங்கள விக்கிரஹம். விக்கிரஹ
அநுபவம் செய்பவர்களுக்கு
என்றபடி. இது உள்ளது-நினைவு துன்பத்துக்குக்
காரணமாகிற தன்மை உள்ளது.
2. வியாக்யாதாவின் ஈடுபாடு,
‘பலம் இல்லாத நான்’ என்றது முதல், ‘ஆர்
என்னை ஆராய்வார் என்கிறாளே அன்றோ’ என்றது முடிய.
“பிராப்தவ்யம் து தஸாயோகம்
மயாஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம்
மர்ஷயாமி இஹ தூர்பலா”
என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.
கம்பராமாயணம்
யுத்தகாண்டம் மீட்சிப்படலம் 32 முதல் 37 முடிய
உள்ள செய்யுள்களை இங்குக் காணல் தகும். நேர்த்தரவு-செல்லுச்சீட்டு.
‘இராவணனும் பட்டானாகில்’ என்றது, இராவணனாலே தேவரீருக்கு நலிவு
வாராமல் இருப்பதற்காக முன்பு
இவர்களை நலியாமல் விட்டேன் என்றபடி.
|