|
1
1“பெயர்களையும்
உருவங்களையும் உண்டுபண்ணக் கடவேன்” என்றும், “தேவர்கள் முதலான எல்லாப் பிராணிகளுக்கும் பெயர்களையும்
உருவங்களையும் அந்தப் பரமாத்மா முதலில் செய்தருளினார்” என்றும் ஒக்கச் சொல்லக்கடவதன்றோ.
2முற்பட வந்தார்க்கு முற்படப் போகவேண்டி இருக்க, பிற்படவும் போகலாகாதோ?
(5)
481
பின்நின்ற காதல்நோய்
நெஞ்சம் பெரிதடுமால்
முன்நின்று இராஊழி
கண்புதைய மூடிற்றால்
மன்நின்ற சக்கரத்துஎம்
மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள்ஆவி
காப்பார்ஆர் இவ்விடத்தே?
பொ-ரை :- விடாது பின்தொடர்ந்து நிற்கின்ற காதலாகிய
நோயானது என் மனத்தினை மிகவும் வருத்தாநிற்கின்றது, இரவாகிய ஊழிக்காலமானது முன்னே நின்று
கண்களின் ஒளி மறையும்படி மூடிவிட்டது. நிலைத்து நிற்கின்ற சக்கரத்தையுடைய எம் மாயவனும்
வருகின்றிலன்; இந்த நிலையில் நிற்கின்ற நீண்ட உயிரை இவ்விடத்திலே காப்பவர்கள் யாவர்?
என்கிறாள்.
வி-கு :-
இரா ஊழி முன்நின்று புதைய மூடிற்று என்க. இவ்விடத்து நீள் ஆவியைக் காப்பவர் ஆர்? என்க.
ஈடு :- ஆறாம்
பாட்டு. 3விரஹத் துன்பமும் செல்லா நிற்க, இரவும் ஆய் ரக்ஷகனானவனும் வாராது ஒழிந்தால்
முடியப் பெறாத உயிரைக் காப்பார் ஆர்? என்கிறாள்.
_____________________________________________________
1. வருகிறபோது ஒருசேர வந்ததோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
பெயர்களையும் என்று தொடங்கி.
“அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய
நாமரூபே வ்யாகர வாணி”
என்பது, சாந்தோக். 6:3.
“நாம ரூபஞ்ச பூதாநாம்
க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவ ஆதௌ
தேவாதீநாம் சகார ஸ:”
என்பது. ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 5 :
63.
2. “பின்நின்றே” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘முற்பட வந்தார்க்கு’
என்று தொடங்கி.
3. பாசுரம்
முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|