முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
178

    பின் நின்ற காதல் நோய் - 1புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலிகிற காதல் நோயானது. இடைந்து ஒதுங்குகைக்கு ஒரு நிழல் இல்லாதபடி இருக்கை. நெஞ்சம் பெரிது அடும் - நெஞ்சினை மிகவும் நோவுபடுத்தாநின்றது. 2நெருப்பானது சுருணையை வேகச் செய்து, பின்பே அன்றோ புறம்பே சென்று சுடுவது; அப்படியே, தான் கிடக்கும் இடத்தை மிகவும் நலியா நின்றதாயிற்று இரா ஊழி முன் நின்று கண் புதைய மூடிற்று - 3காதல் நோயும் இரவாகிய கல்பமும் தம்மிலே சங்கேதித்துக்கொண்டு வந்தாற் போலே இராநின்றது. 4‘நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்துகொள்’ என்று வருவாரைப் போன்று வந்தன என்றபடி. 5எதிரிகள் எளியரானால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க் கொண்டு பரிபவம் செய்வாரைப் போன்று 6இத்தலையில் எளிமை கண்டு இரவாகிய ஊழி, முன்னே நின்று கண்களை மறையா நின்றது. 7உட்கண்ணினைக் காதல் மறையா நின்றது, கட்கண்ணை இரவு மறைத்தது. அறி

______________________________________________________

1. “பின் நின்ற” என்பதற்கு, போன இடம் எங்கும் பின் தொடர்ந்து நிற்கிற
  என்று பொருள் அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றி அதனை
  அருளிச்செய்கிறார் ‘புக்க இடம்’  என்று தொடங்கி. வடிம்பிடுதல் -
  அடிமேல் அடி இடுதல். “நின்ற” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  “இடைந்து” என்று தொடங்கி. இடைதல் - விலகுதல்.

2. நோயானால் சரீரத்தை வருத்திப் பின்பன்றோ நெஞ்சை வருத்த வேண்டும்?
  என்ன, ‘நெருப்பானது’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. “பின்னின்ற காதல்நோய்” என்றதனையும் சேர்த்துக்கொண்டு பொருள்
   அருளிச்செய்கிறார் ‘காதல் நோயும்’ என்று தொடங்கி.

4. சங்கேதம் எப்படி? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நான்
  பின்னிட்டு’ என்று தொடங்கி.

5. கிரஹிக்கின்ற கண்களாகிய இந்திரியத்தைக் கிரஹிக்கப்படுகின்ற பொருள்
  மறைத்தல் என்பது எப்படி? என்ன, ஒரு திருஷ்டாந்த முகத்தால் அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘எதிரிகள்’ என்று தொடங்கி.

6. ‘இத்தலையில் எளிமை’ என்றது, தலைவனைப் பிரிந்து துக்கத்தோடு கூடி
  இருக்கின்ற எளிமையைத் தெரிவித்தபடி.

7. “நெஞ்சம் பெரிதடுமால்” “கண்புதைய மூடிற்றால்” என்று கூட்டி, பாவம்
   அருளிச்செய்கிறார் ‘உட்கண்ணினை’ என்று தொடங்கி.