|
New Page 1
‘பிரிவிலும் முடியாத என்
1உயிர்ப் பகையை நீக்கி, என்னை நோக்குவார் ஆர்’ என்று. இவ்விடத்தே-2சர்வ
ரக்ஷகனானவனும் உதவாத இந்த நிலையிலே இனி முடிந்து பிழைத்தலே அன்றோ சுகம்.
(6)
482
காப்பார்ஆர் இவ்விடத்து?
கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச்
செல்கின்ற கங்குல்வாய்த்
தூப்பால வெண்சங்கு
சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன்
தெய்வங்காள்! என்செய்கேனோ?
பொ-ரை :- இந்தச் சமயத்தில் காப்பவர்கள் யார்தாம்?
செறிந்த இருளோடும் நுண்ணிய துளிகளோடும் நெடுமையினையே இயல்பாகவுடைய ஊழிக்காலமாகிச் செல்கின்ற
இந்த இரவுக்காலத்தில், பரிசுத்தமான தன்மையுடைய வெண்மை நிறம் பொருந்திய சங்கையும் சக்கரத்தையுமுடைய
என் தலைவன் தோன்றானால்; தீயின் தன்மையையுடைய கொடிய வினைகளைச் செய்த என்னுடைய தெய்வங்களே!
நான் என் செய்வேன்? என்கிறாள்.
வி - கு :-
கங்கு - கரை. இருளோடும் பனித்துளியோடும் ஊழியாகச் செல்கின்ற கங்குல் என்க. தூ - பரிசுத்தம்.
தீ - நெருப்பு. பால - தன்மையையுடைய. பால் - தன்மை.
ஈடு :- ஏழாம்
பாட்டு. 3இரவுப்பொழுதாகிற யுகம் செல்லா நிற்க அவன் வந்து தோற்றாமையாலே, கண்
மூடாதவர்கள் ஆகையாலே உறங்காத தெய்வங்களைக் குறித்து, நான் என் செய்வேன்? என்கிறாள்.
இவ்விடத்துக்
காப்பார் ஆர் - 4எல்லாரையும் காக்கின்றவனானவன் காவாதிருக்க, இவ்வளவில் பாதகர்
ஆனார்
____________________________________________________
1. உயிர்ப்பகை - பிழைத்திருக்கிற
பகை.
2. இப்படியாகிலும் ஆத்மாவை
முடிக்கத் தேடுகிறது என்? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘சர்வ ரக்ஷகனானவனும்’ என்று தொடங்கி.
3. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
4. சக்கரத்தன்
தோன்றானால், செல்கின்ற கங்குல்வாய் இவ்விடத்துக் காப்பார்
ஆர் என்று கூட்டி க்ஷேபம் தோன்ற,
பாவம் அருளிச்செய்கிறார்
‘எல்லாரையும்’ என்று தொடங்கி.
|