முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
185

இருப்பது. இவர் அல்லிலே கிடந்து நோவுபடுகிறாரே அன்றோ. 1அவன் உண்டாயிருக்க, முதலிலே ஒருவர்க்கும் வருத்தம் இல்லையே அன்றோ.

    கங்கு இருளில் - எல்லையான இருள் என்னுதல்; தடித்த இருள் என்றபடி. கங்கு-எல்லை. அன்றிக்கே, கங்குலில் இருள் என்னுதல்; ‘தச ராத்ரம், சப்த ராத்ரம்’ என்றால், பத்துநாள், ஏழுநாள் என்று நாள்களைக் காட்டுவது போன்று இங்குக் ‘கங்குல்’ என்பதும் இரவாகிற காலத்தைக் காட்டுகிறது. இரவிடத்தில் என்பது பொருள். ‘மருங்குல்’ என்பது ‘மருங்கு’ என வருமாறு போன்று, கங்குல் என்பது, கங்கு எனக் கடைக்குறைந்து வந்த விகாரம். நுண் துளியாய் - நுண்ணிய துளியுமாய். சேண்பாலது ஊழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய் - மிக்க நெடுமையை ஸ்வபாவமாக உடைத்தான கல்பமாய்க்கொண்டு செல்லுகிற இரவிடத்து. 2தமிழர்க்கு அகத்தியரைப் போன்று இருப்பான் தமிழாசிரியன் ஒருவன், செல்கின்ற கங்குல் வாய் என்பதற்குச் செல்கின்ற நாளகத்து என்று உரை எழுதி வைத்தான். தூப் பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால் - இருளைப் போக்கும்போது சந்திர சூரியர்கள் சேர உதித்தாற்போன்று இருக்கின்ற திவ்விய ஆயுதங்களையுடையவன் வருகின்றிலன். 3அந்தச் சந்திர

____________________________________________________

  சிலேடை: ஹல்லான மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்ம ஸ்வரூபத்தை
  நினைத்து என்பது நேர்பொருள். இரவிலே என்பது வேறும் ஒருபொருள்.
  ஆக, ‘ஓர் அச்சாயன்றோ’ என்று தொடங்கும் வாக்கியத்திற்கு,
  அகாரவாச்சியனான சர்வேச்வரனை நினைத்து, பாரம் அற்றவளாய் இருக்க
  வேண்டியவளாக இருக்க, மகாரவாச்சியனான ஆத்மாவை அநுசந்தித்து,
  ‘நம்மை நாம் எங்கே காத்துக்கொள்ளப் போகிறோம்’ என்று
  நோவுபடுகிறாள் என்பது கருத்து. அச்சு-உயிர். அல்-மெய்.

1. அவனுடைய ரஷகத்வத்தை நினைத்தால் வருந்தாமல் இருக்கக் கூடுமோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அவன் உண்டாயிருக்க’ என்று
  தொடங்கி.

2. “கங்குல்வாய்” என்பதற்கு, இரவாகிய காலத்தில் என்று தாம் அருளிச்செய்த
   பொருளுக்கு, சம்வாதம் காட்டுகிறார் ‘தமிழர்க்கு’ என்று தொடங்கி.

3. தோன்றி மறைகின்ற சந்திர சூரியர்கள் இவ்விருளைப் போக்க
  மாட்டார்களோ? என்ன, ‘அந்த’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.