|
உறங
உறங்காதவர்கள்; இவளோ
எனின், “உண்டோ கண்கள் துஞ்சுதல்” என்றிருப்பவள். அதற்குமேல் இப்போது இருளுக்கு அஞ்சியும்
உறங்காள். தன் நிலையைக் கண்டு அதற்கு அவர்கள் உறங்காதே இருக்கிறார்களாகக் கொண்டு, அவர்களைத்
தஞ்சமாக நினைத்துக் கேட்கிறாள், சிறை உறவு போன்று. தோழிமாருங்கூட உறங்கா நிற்கச் செய்தே
அவர்கள் உறங்காதிருக்கையாலே, அவர்களைக்காட்டிலும் இவர்களை அன்னிய உறவாக நினைத்துச்
சொல்லுகிறாள். “ஆயும் அமருலகுந் துஞ்சிலும்” என்று தாய்மாரோடு ஒரு சேர எடுத்துப் பேசப்படுகிறதே
அன்றோ தேவர்களையும். துன்பம் மிக்கால் ‘அம்மே! என் செய்வேன்’ என்றாற்போலே
இருக்கிறது காணும்.
(7)
483
தெய்வங்காள் என்செய்கேன்?
ஓர்இரவு ஏழ்ஊழியாய்
மெய்வந்து நின்று
எனதாவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரத்துஎன்
கண்ணனும் வாரானால்
தைவந்த தண்தென்றல்
வெம்சுடரில் தான்அடுமே.
பொ-ரை :- தெய்வங்களே! என்ன செய்வேன்? ஓர் இரவானது
ஏழு ஊழிக்காலமாக நீண்டு மெய்யாகவே என்முன்னே வந்து நின்று என்னுடைய உயிரை வருத்துகின்றது; கையிலே
வந்திருக்கின்ற சக்கரத்தையுடைய என் கண்ணபிரானும் வருகின்றான் இலன்; தடவுகின்ற குளிர்ந்த தென்றலானது
கொடிய நெருப்பைக்காட்டிலும் கொடிதாக வருந்தாநின்றது.
வி-கு :-
இரவு மெலிவிக்கும் என்க. கைவருதல் - கையிலே வந்திருத்தல். அன்றிக்கே, அடக்கமான என்னலுமாம்.
தைவந்த-தை மாதத்தில் வந்த. அன்றிக்கே, தடவுதலுமாம். சுடரில்: ஐந்தாம் வேற்றுமை உறழ்பொரு.
ஒப்புப்பொருவுமாம்.
ஈடு :- எட்டாம்
பாட்டு. 1ஓர் இரவே பல யுகமாய் மிகவும் நலியாநின்றது, எம்பெருமானும் வருகின்றிலன்,
அதற்கு மேலே தென்றலும் நலியாநின்றது என்கிறாள்.
தெய்வங்காள் என்
செய்கேன் - 2மற்றும் உறங்காதிருப்பவர்கள் உளராகில் அன்றோ அவர்களைப் பார்த்துச்
_____________________________________________________
1. “ஓர் இரவு ஏழ் ஊழியாய்”
என்பது முதலானவற்றைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. இப்பாசுரத்திலும்
“தெய்வங்காள் என் செய்கேன்?” என்கிறது என்? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மற்றும்
என்று தொடங்கி.
|