|
New Page 1
சொல்லலாவது. ஓர் இரவு
ஏழ் ஊழியாய் - மேலே, ‘ஊழியாய்’ என்றது, இராத்திரி மாத்திரமேயாய் நின்று நலிந்தது என்னும்படி,
இது பல கல்பமாக நலியாநின்றது. 1சௌபரி, இன்பத்தை அனுபவிப்பதற்குப் பல வடிவுகள்
கொண்டாற்போன்று, இதுவும் துன்புறுத்துவதற்குப் பல வடிவுகள் கொள்ளாநின்றது என்றபடி. மெய் வந்து
நின்று-2ஈச்வரன் கட்டின மர்யாதை குலைக்க ஒண்ணாமை வந்தது மாத்திரம் அன்றிக்கே,
தனக்கே சீற்றமுடையாரைப் போலே மெய்யே முன்னே வந்து நின்று. 3இராவணன் இடம்
பார்த்து வந்தாற்போன்று, விரகநிலை என்று அறிந்து நலியாநின்றது என்பாள் ‘வந்து நின்று’
என்கிறாள். எனது ஆவி மெலிவிக்கும் - 4மோர்க்குழம்பு கொடுத்துத் தேற்றி
விடுநகம் கட்டி நலிவாரைப் போன்று, ‘சென்றற்றது’ என்னும்படி இருக்கிற என்னுடைய உயிரை உண்டாக்கி
நலியாநின்றது. என்றது, போன உயிரை மீளக்கொடுத்து நலியா நின்றது என்றபடி.
கைவந்த சக்கரத்து-5இந்தத்
துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல்தான் இருக்கிறானோ? 6அழையாதிருக்கச்
செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும்
_____________________________________________________
1. பல கல்பமாய் நலிவதற்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘சௌபரி’ என்று
தொடங்கி. முதல் பத்து ஈட்டின் தமிழாக்கம் பக்.
43. குறிப்புப் பார்க்கவும்.
2. “மெய்வந்து” என்பதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘ஈச்வரன் கட்டின’
என்று தொடங்கி.
3. “வந்து நின்று” என்பதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘இராவணன்’ என்று
தொடங்கி.
4. “பேர் என்னை மாயாதால்”
என்று மேலே இருக்க, இங்கே “மெலிவிக்கும்”
என்கைக்கு ‘ஆவிதான்’ உண்டோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘மோர்க்குழம்பு கொடுத்து’ என்று தொடங்கி. விடுநகம்
கட்டி - கிட்டியைக்
கட்டி.
5. “சக்கரத்து” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘இந்தத் துன்பத்தை’
என்று தொடங்கி.
6. “கைவந்த”
என்பதற்கு, இரண்டு வகையாகக் கருத்து அருளிச்செய்கிறார்.
‘அழையாதிருக்கச் செய்தேயும்’ என்றது
முதல், ‘இழந்தீ ரானீரித்தனை’
என்றது முடிய, முதல் கருத்து.
|