முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
19

New Page 1

கொள்ளுவதற்குத் தகுதியாக இருப்பது ஒரு சாதனத்தைச் செய்வதற்கு ஆற்றல் இல்லாதவனாக இருக்கிறேன் பக்தி பாரவஸ்யத்தாலே; ஆனபின்பு, நீயே என் விரோதியைப் போக்கி உன் திருவடிகளிலே அழைத்துக்கொண்டருள வேண்டும் என்கிறார்” என்று நிர்வஹிப்பாரும் உளர். முறைப்படி வரும் பக்தி தமக்கு உண்டாக நினைத்திராரே அன்றோ?

    உன்னை விட்டு என் கொள்வன் என்னும் வாசகங்கள் சொல்லியும் - 1பரமைகாந்திகளைப் போலே உன்னை ஒழிய நான் எதனைக் கொள்வன்? என்று இங்ஙனே வாயாலே சொல்லா நிற்கச்செய்தேயும். வன் கள்வனேன் - களவாவது - பிறருடைய பொருளை அவர் அறியாமலே கொள்வது. வன்களவாவது, பகவானுக்குரியதான ஆத்மாவை என்னது என்று இருத்தல்.2 “ஆத்மாவை அபகரித்த திருடனால்” என்கிறபடியே, பகவானுக்கு உரிமைப்பட்ட ஆத்ம வஸ்துவை அன்றோ நான் ‘என்னது’ என்று இருந்தது? 3விறகினைக் களவு கண்டாரளவு அல்லவே அன்றோ, இரத்தினத்தை அபகரித்தலைச் செய்தாரளவிலே உள்ள தோஷம். 4திரவியங்களை எடுத்துப் பேசுகிற இடத்தில் ஆத்ம வஸ்துவைப் பிரதாநமாகச் சொல்லிப் போந்தார்

____________________________________________________

1. ‘பரமைகாந்திகள்’ என்றது, உபாய உபேயங்கள் இரண்டும்
  எம்பெருமானேயாவன் என்று நினைத்திருக்கும் பெரியோர்கள்.

2. “யோந்யதா சந்தம் ஆத்மாநம் அந்யதா பிரதிபத்யதே
  கிம் தேந ந கிருதம் பாபம் சோரேண ஆத்மா பஹாரிணா”

  என்பது, பாரதம் உத்யோகபர்வம். திருதராட்டினைப் பார்த்துச் சனத்சுஜாதர்
  கூறியது.

3. ‘ஆத்மாவைத் திருடுதல் கொடியதோ?’ என்ன, ‘விறகினை’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. ‘இவ்வாத்ம வஸ்து அப்படி உயர்ந்ததோ?’ என்ன, ‘திரவியங்களை’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

  “ஆத்மாநம் அஸ்ய ஜகதோ நிர்லேபம் அகுணாமலம்
  பிபர்த்தி கௌஸ்துபமணி ஸ்வரூபம் பகவான் ஹரிஃ”

  என்றதனைத் திருவுள்ளம்பற்றிச் ‘சொல்லிப் போந்தார்களே அன்றோ’?
  என்கிறார். ‘சொல்லிப் போந்தார்கள்’ என்றது, பராசராதிகளை.