முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
191

தக

தக்கது’ என்று செய்தார். என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி. த்வயா புத்ரேண-போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது, 1‘நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்; ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ. தர்மாத்மா-ஐயரும் ஒருவரே! தாம் பரமதார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம்சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே! ந ஸம்விருத்த: பிதா மம - நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”

    2
ஸ்ரீவீடுமரைத் தொடருகிறபோது கையிலே வந்திருந்ததே அன்றோ திருவாழி. ஸ்ரீவீடுமர் நெடும்போது பொருதபடியால் அருச்சுனன் இளைத்தான், அவன் இளைத்தவாறே சர்வேச்வரன் தன் சூளுறவை மறந்தான், தேரில் நின்றும் குதித்துத் திருவாழியைக் கொண்டு தொடர்ந்தான், வந்து கொன்றருளீர் என்கிறான். 3“ஏஹி ஏஹி புல்லாம்புஜ பத்ர நேத்ர-என்றும் ஆணை மறுத்தாலும் சேதம் இல்லையே! இச்சீறிச் சிவந்த கண்ணழகை அநுபவிக்கப்பெற்றால்,

_____________________________________________________

1. சக்கரவர்த்திக்கு நிரயமாவது யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘நாம் உள்ளதனையும்’ என்று தொடங்கி.

2. அப்படித் திருவாழியானது நினைவறிந்து கைவந்த இடம் உண்டோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ வீடுமரை என்று தொடங்கி.

3. “ஏஹ்யேஹி புல்லாம்புஜபத்ர நேத்ர
   நமோஸ்துதே தேவவர அப்ரமேய
   ப்ரஸஹ்ய மாம் பாதய லோகநாத
   ரதோத்தமாத் பூதசரண்ய சங்க்யே”

  என்பது, பாரதம் வீடும பருவம், 59 : 98.

 
    ‘ஆணை மறுத்தாலும்’ என்றது, ‘ஆயுதம் எடேன்’ என்ற கிருஷ்ணனை
  ஆயுதத்தை எடுப்பித்துச் சேஷியினுடைய சூளுறவை அழித்தல் என்றபடி.
  சேதம் இல்லை - தவறு இல்லை.