முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
193

பூட

பூட்டுவதாய் இரா நின்றதாயிற்றுக் குளிர்ந்த தென்றல் என்றபடி. “தான் சென்று மண்மகளைத் 1தைவந்தான்” என்ற இடத்துத் தைவருதல் என்பது, தடவுதல் என்ற பொருளதாதல் காண்க. வெம் சுடரில் தான் அடுமே - வெவ்விய சுடரைக்காட்டிலும் அடும் என்னுதல். சுடரைப் போன்று நலியாநின்றது என்னுதல். 2உலகத்திலே உள்ள நெருப்பைக்காட்டிலும் நரகாக்நிக்குள்ள வாசி போருமே அன்றோ, நரக அக்நியைக்காட்டிலும் பிரிந்த சமயத்தில், அநுகூலமான பொருள்களுக்கு.

(8)

484

        வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்
        அஞ்சுடர வெய்யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்
        செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்
        நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே.


    பொ-ரை :-
இந்த இரவானது, செறிந்த இருளோடும் நுண்ணிய துளிகளோடும் சேர்ந்து கொடிய நெருப்பினைக்காட்டிலும் மிக அதிகமாக எரித்து வருத்தா நின்றது, அழகிய பிரகாசத்தையுடைய சூரியனது அழகிய பெரிய தேரும் தோன்றுகிறதில்லை; சிவந்த பிரகாசம் பொருந்திய தாமரைபோன்ற கண்களையுடைய செல்வனும் வருகின்றான் இலன்; நிலைபெற்று உருகிக்கொண்டிருக்கின்ற என்னுடைய மனத்துன்பத்தை நீக்குகின்றவர்கள் யார்? என்கிறாள்.

    வி-கு :-
சுடரில்: ஐந்தாம் வேற்றுமை உறழ்பொரு. ஒப்புப் பொருளுமாம். தான் - இரவு. உருகுகின்றேன் - வினையாலணையும் பெயர்.

    ஈடு :-
ஒன்பதாம் பாட்டு. 3இரவும் நலியாநின்றது, சூரியோதயமும் ‘நமக்கு’ என்றவாறே வேண்டத்தக்க

___________________________________________________

1. “தைவந்த” என்பதற்கு இரண்டு பொருள்: ஒன்று, தை மாதத்திலே வந்த
   என்பது. அதனையே, ‘குளிர்ந்த காலத்திலே’ என்று தொடங்கி
   அருளிச்செய்கிறார். மற்றொன்று, தடவுகின்ற என்பது. தடவுதல் என்ற
   பொருளுக்கு மேற்கோள் காட்டுகிறார் ‘தான் சென்று மண்மகளை’
   என்று தொடங்கி.

2. “வெஞ்சுடரில்” என்றதற்கு, அருளிச்செய்த இருவகைப் பொருள்களுள்,
   முதற்பொருளை நோக்கி அருளிச்செய்கிறார் ‘உலகத்திலேயுள்ள’ என்று
   தொடங்கி.

3. “வெஞ்சுடரில் தான் அடுமால்” என்றதனைக் கடாக்ஷித்து ‘இரவும்
   நலியாநின்றது’ என்கிறார். இருளுக்கும் இரவுக்கும் உள்ள அபேதத்தைத்
   திருவுள்ளத்தே கொண்டு ‘இரவும்’ என்கிறார்.