முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
195

வருகின்றிலன். 1இது, இளைய பெருமாள் அகல நின்றாற்போலே ஆயிற்று. 2பிரளயத்தில் சிறிது தூரம் எஞ்சி இருக்க நீந்தி, ‘கரையைக் கிட்டினோமோ, கிட்டினோமோ!’ என்று பார்ப்பாரைப் போலே காணும், இரவு முழுவதும் நோவுபட்டு, ‘விடிந்ததோ, விடிந்ததோ, என்று பார்க்கிறபடி.

    செம்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்-சிவந்த சுடரையுடைய தாமரை போன்ற திருக்கண்களையுடைய செல்வத் திருமாலும் வருகின்றிலன். 3சூரியன் வந்தாலும் இருள் வருவதற்குச் சம்பாவனை உண்டே அன்றோ, மறையாத சூரியனும் வருகின்றிலன் என்னுதல். 4அந்தச் சூரியனுடைய பிரகாசமும் எல்லா இடங்களிலும் இராதே அன்றோ, உபய விபூதிகட்கும் பிரகாசத்தைச் செய்யுமவன் அன்றோ இவன். 5“பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்” என்னக்கடவதன்றோ. 6“காலை

____________________________________________________

1. மேலே, ‘இராவணன் மாரீசனைத் துணையாகக்கொண்டு’ என்று
  அருளிச்செய்ததற்குத் தகுதியாக அருளிச்செய்கிறார் ‘இது, இளைய
  பெருமாள்’ என்று தொடங்கி. ‘இது’ என்றது, அணிநெடுந்தேர் தோன்றாதே
  அகல நின்றதனை. அன்றி, சூரியன் மறைந்ததனை என்னலுமாம்.

2. ‘வாராது’ என்னாமல், “தோன்றாதால்” என்றதற்குக் கருத்து
  அருளிச்செய்கிறார் ‘பிரளயத்தில்’ என்று தொடங்கி.

3. “அஞ்சுடர வெய்யோன்” என்றதனை அடுத்து, “செஞ்சுடர்த் தாமரைக்கண்
   செல்வன்” என்றது, சூரியனைக்காட்டிலும் இவனுக்குள்ள வேறுபாட்டினைக்
   காட்டுவதற்காக என்று, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்யத்
   திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘சூரியன் வந்தாலும்’ என்று
   தொடங்கி.

4. வேறும் ஓர் ஆகாரத்தாலே வேறுபாட்டினைக் காட்டுகிறார் ‘அந்தச்
  சூரியனுடைய’ என்று தொடங்கி.

5. உபய விபூதிகட்கும் பிரகாசத்தைச் செய்வதற்கு மேற்கோள் காட்டுகிறார்
  ‘பகற்கண்டேன்’ என்று தொடங்கி. என்றது, ‘நாரணனைக் கண்டேன்’
  என்றதனால், உபய விபூதிகட்கும் நாதனாம் தன்மையைச் சொல்லி,
  ‘பகற்கண்டேன்’ என்கையாலே, உபய விபூதிகட்கும் பிரகாசத்தைச்
  செய்கின்றவன் என்பது போதரும் என்றபடி. இது, இரண்டாம் திருவந். 81.

6. “அஞ்சுடர வெய்யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்” என்றதன் பின்,
  “செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்” என்றதற்கு, பாவம்
   அருளிச்செய்கிறார் ‘காலையில்’ என்று தொடங்கி.

  “தஸ்யயதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ”

 
 என்பது, சாந்தோக்யம். 1 : 6.