|
ய
யில் சூரியனுடைய ஒளியால்
மலர்ந்த தாமரைமலர் எவ்வண்ணம் இருக்குமோ அவ்வண்ணமே அந்தப் பரப்பிரஹ்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய
திருக்கண்களும்” என்கிறபடியே, சூரிய மண்டலத்திலே எழுந்தருளியிருக்கிறவனும் வருகின்றிலன். என்றது,
1சூரியனுடைய வரவுக்கு அருணோதயம் போலே இருப்பது ஒன்றே அன்றோ, அந்தச் செல்வத்
திருமாலுடைய வரவுக்குச் சூரியனுடைய தோற்றரவு என்றபடி. நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் -
2மனத்திலே உள்ள துன்ப இருளைப் போக்குவார் யார்? புற இருளைப் போக்குமவனன்றோ
அந்தச் சூரியன்; மனத்திலே உள்ள இருளானது வயிரம் பற்றின இடரே அன்றோ; அதனைப்
போக்கும்போது நிலவனுமாய் அந்தரங்கமானவனுமே வேணுமே. 3“ஞானமாகி ஞாயிறாகி” என்னக்
கடவதன்றோ. நின்று உருகுகின்றேனே - 4விலக்ஷண விஷயத்தில் உண்டான பிரிவானது,
உருகிற்றாய் தர்மிலோபம் பிறக்கவும் ஒட்டாது, தரிக்கவும் ஒட்டாது, முடிய
____________________________________________________
1. ‘சூரியனுடைய வரவுக்கு’
என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து, தன்
மண்டலத்திலே வசிக்கின்ற ஈச்வரனுடைய
வரவுக்குத் தான் சூசகமான
தன்மையாலே சூரியனாகிய தன்னுடைய வரவும் வேண்டத் தக்கதாயிருக்கும்
என்பது.
2. “வாரானால்” என்ற பதத்தையும்
கூட்டிப் பொருள் அருளிச்செய்கிறார்
‘மனத்திலேயுள்ள’ என்று தொடங்கி. மன இருளைச் சூரியன்
போக்கானோ?
என்ன, ‘புற இருளை’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
அந்தரங்கமானவனாகையாலே
நிலவன் என்றபடி. நிலவன்-தேசிகன்.
3. மன இருளை இவன்
போக்கும் விதம் யாங்ஙனம்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘ஞானமாகி’ என்று தொடங்கி.
என்றது, மன இருளைப்
போக்கும் ஞானமுமாய்ப் புற இருளைப் போக்கும் சூரியனுமாய் என்றபடி.
ஈனமாய எட்டும் நீக்கி
ஏதமின்றி மீதுபோய்
வானமாள வல்லையேல் வணங்கி
வாழ்த்தென் நெஞ்சமே!
ஞானமாகி ஞாயிறாகி ஞால
முற்றும் ஓர்எயிற்று
ஏனமா யிடந்த மூர்த்தி எந்தைபாதம்
எண்ணியே.
என்பது, திருச்சந். 114.
4.
“உருகுகின்றேனே” என்று நிகழ்காலத்தால் அருளிச்செய்வதற்குக் கருத்து
அருளிச்செய்கிறார் ‘விலக்ஷண
விஷயத்தில்’ என்று தொடங்கி. தர்மி-ஆத்மா.
|