முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
197

உருகினபடியே நிற்குமித்தனை. 1‘இன்னம் ஒருகால் காணலாமோ’ என்னும் நசை முடிய ஒட்டாது, அப்போதைய இழவு பிழைத்திருக்க ஒட்டாது.

(9)

485

        நின்றுருகு கின்றேனே போல நெடுவானம்
        சென்றுருகி நுண்துளியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்
        அன்றொருகால் வையம் அளந்தபிரான் வாரான்என்று
        ஒன்றொருகாற் சொல்லாது உலகோ உறங்குமே.


    பொ - ரை :-
நின்று உருகுகின்றவளான என்னைப் போன்று, பரந்த ஆகாசமானது தேய்ந்து சென்று உருகி நுண்ணிய துளியாகிச் செல்கின்ற இந்த இரவிடத்து, மஹாபலி பூமியைக் கவர்ந்த அக்காலத்தில் ஒரு தடவை பூலோகத்தைத் தன் திருவடிகளால் அளந்த உபகாரகன் வாரான் என்று ஒரு வார்த்தையை ஒரு தடவை சொல்லாமல் இந்த உலகமானது உறங்காநிற்கும்; இது என்னே! என்கிறாள்.

    வி-கு :-
வானம் சென்று உருகித் துளியாகிச் செல்கின்ற கங்குல் என்க. என்று ஒருகால் சொல்லாது உலகு உறங்கும் என்க.

    ஈடு :-
பத்தாம் பாட்டு. 2இந்த இரவில் என்னுடைய துன்பத்தைக் கண்டுவைத்து அவன் திறமாக ஒரு வார்த்தை சொல்லாதே உலகமாக உறங்குவதே! என்கிறாள்.

    நெடுவானம் சென்று உருகி நுண் துளியாய்ச் செல்கின்ற-எல்லாப் பொருள்கட்கும் இடம் கொடுக்கின்ற பரப்பையுடைய ஆகாசமானது, 3சென்றற்று நுண்ணிய துளியாய் இற்று விழாநின்றது. யாரைப் போன்று எனின், நின்று உருகுகின்றேனே போலே - 4கண்கூடாகக் கண்டதனை அன்றோ உபமானமாகச் சொல்லுவது, ஆதலால்,

___________________________________________________

1. உருகுகிறது என்? முடிந்து பிழைத்தாலோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘இன்னம் ஒருகால்’ என்று தொடங்கி.

2. “சென்று உருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல்” என்றதனைக்
   கடாக்ஷித்து ‘இந்த இரவில்’ என்கிறார். ஒருவார்த்தை-எனக்கு ஒரு
   வார்த்தையை.

3. “சென்று” என்றது, சென்றற்று என்றாய், துக்கத்து என்றபடி.

4. தன்னை ஒழிய வேறு திருஷ்டாந்தம் இல்லையோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘கண்கூடாக’ என்று தொடங்கி.