|
தன
தன்னையே
சொல்லுகிறாள். 1“எவருக்கு, ஜனக குலத்தில் பிறந்த அந்தப் பிராட்டி மனைவியாக
இருக்கின்றாளோ அந்தப் புருஷோத்தமனுடைய பராக்கிரமம் அளவிட்டு அறிய முடியாததாக இருக்கிறது”
என்கிறபடியே, பெரியவர்களுடைய பெருமையும் தன் சம்பந்தத்தாலேயாம்படி இருக்குமவளன்றோ.
‘திருமகள் கேள்வனாகையாலே சர்வாதிகன்’ என்னக் கடவதன்றோ. கங்குல்வாய்-இப்படிச் செல்லுகிற
இரவிடத்து.
அன்று ஒருகால் வையம்
அளந்தபிரான் வாரான் என்று சொல்லாது-2“பிரிவாற்றாமையிலும் பிழைத்திருத்தலுக்கு
நிமித்தம் அவனுடைய அடிப்பாடு. என்றது, வரையாதே எல்லாரையும் ஒருசேரக் காப்பாற்றியவன், தன்னாலே
வந்த ஆற்றாமையைப் போக்காது இருப்பானா’ என்னுமதே அன்றோ ஜீவித்திருக்கைக்குக் காரணம்,
அதுவும் அவனுக்கு, 3புழுக்குறியிட்டது எழுத்தானாற் போன்று எதுவோ ஒரு
____________________________________________________
1. பெரிய பொருளான ஆகாசத்துக்கு,
அணுப்பொருளாக இருக்கும் தன்னை
உபமானமாகச் சொல்லுதல் கூடுமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘எவருக்கு’ என்று தொடங்கி.
“அப்ரமேயம் ஹி தத்தேஜ:
யஸ்ய ஸா ஜநகாத்மஜா
நத்வம் ஸமர்த: தாம் ஹர்த்தும்
ராமசாபாஸ்ரயாம் வநே”
என்பது, ஸ்ரீராமா-ஆரண். 37 : 18.
‘தன்’ என்றது, பிராட்டியை.
அதனையே விளக்குகிறார் ‘திருமகள்
கேள்வனாகையாலே’ என்று தொடங்கி.
2. “வையம் அளந்தபிரான்”
என்பதும், “வாரான்” என்பதும், ஒன்றற்கொன்று
பொருளால் முரண் ஆகையாலும், இவை இரண்டும்
ஜீவனத்தில்
நசைஅறுகைக்குக் காரணமான உலகினர் வார்த்தையாகக் கூடாமையாலும்,
“வையம் அளந்தபிரான்”
என்றதனைத் தலைவியின் வார்த்தையாக்கி,
“அன்றொருகால்” என்ற பதத்தை அநுசந்தித்துக்கொண்டு,
“வாரான்” என்ற
பதத்தை உலகினர் வார்த்தையாக்கி, அதற்குப் பாவம் அருளிச்செய்கிறார்
‘பிரிவாற்றாமையாலும்’ என்றது முதல், ‘அது அவனுக்கு
என்றைக்குமுள்ளதொரு தன்மை அன்று காண் என்று
சொல்லுகிறார்
இலர்’ என்றது முடிய. அடிப்பாடு-திருவடிகளின் சாந்நித்யமும், கீழே
விழுதலும்.
3. ‘புழுக்குறியிட்டது எழுத்தானாற்போன்று’
என்ற இவ்விடத்தில்,
மானத்து வண்ட லுழவோ ரெழுத்தின்
வடிவுற்றசீர்
மானத்து வண்ட வினையாள
ராயினும் மால்வளர்வி
மானத்து வண்டல மாமரங் கம்வழி
யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட
ராம்பதம் வாய்க்குமங்கே.
என்ற திவ்வியகவி திருவாக்கு
நினைவுகூர்தல் தகும்.
|