|
க
காலத்தில் வந்தது ஒன்று,
அது அவனுக்கு என்றைக்கும் உள்ளது ஒரு தன்மை அன்றுகாண்” என்று சொல்லுகிறார் இலர். 1‘அன்று
ஒருகால்’ என்றது, அன்று அங்ஙனே ஒருகால் செய்தானித்தனை, அவனுக்கு எற்றைக்கும் நியதமாய்
இருப்பது ஒரு தன்மை அன்றுகாண் என்கிறார் இலர். 2‘பிரான்’ என்னாநிற்கச்செய்தே
அன்றோ ‘வாரான்’ என்கிறது. என்றது, “உலக முழுதினையும் அளந்துகொண்ட உபகாரகன் அன்றோ
என்று நினைக்கிறாயாகில், பெருக்காறு பெருகினாற்போலே அது அங்ஙனே ஒருகால் செய்து போன இத்தனை,
வாராமையே காண் ஸ்வபாவம்” என்கிறார் இலர் என்றபடி. ஒன்று-‘வரும்’ என்ன வேண்டா, ‘வாரான்’
என்ன அமையும். 3‘இன்னம் வருவான்’ என்னும் நசைகொண்டு ஜீவிக்க இருப்பார்க்கே
அன்றோ ‘வரும்’ என்றே சொல்ல வேண்டுவது. ‘வரும்’ என்னவுமாம், ‘வாரான்’ என்னவுமாம். 4ஒருகால்
- ஒருகால் சொன்னால் பின்னையும் ஜீவிப்பார்க்கே அன்றோ இருகால் மட்டுச் சொல்ல வேண்டுவது.
‘அவன் இனி வாரான்’ என்று அறிந்தபோதே மூச்சு அடங்குமே அன்றோ. உலகு ஓ உறங்
____________________________________________________
1. மேலே தொகுத்து அருளிச்செய்ததனைப்
பதங்களிலே ஏறிட்டுக் காட்டுகிறார்
‘அன்றொரு கால்’ என்று தொடங்கி, ‘வாராமையே காண் ஸ்வபாவம்
என்கிறார் இலர்’ என்பது முடிய.
2. “பிரான்” என்னாநிற்கச் செய்தே, “வாரான்” என்றல் கூடுமோ? என்கிற
விரோதத்தை அநுவதித்துப் பரிஹரிக்கிறார் ‘பிரான் என்னாநிற்கச் செய்தே’
என்று தொடங்கி.
3. ‘வரும்’ என்று சொல்லுகையே அபேக்ஷிதமாயிருக்க, “வாரான்” என்றும்,
“ஒன்று” என்றும் இரண்டினையும் சொல்லுவான் என்? என்ற சங்கையிலே
அருளிச்செய்கிறார் ‘இன்னம் வருவான்’ என்று தொடங்கி.
4. மேலே “ஒன்று” என்பதற்கு,
‘வாரான் என்ன அமையும்’ என்று பொருள்
அருளிச்செய்தார். இங்கு, “ஒன்று” என்பதனை “வாரான்” என்ற சொல்லோடு
சேர்த்து, வாரான் என்ற ஒன்று-வாரான் என்று ஒரு வார்த்தையை என்று
பொருள் அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி “ஒருகால்” என்பதற்கு, பொருள்
அருளிச்செய்கிறார் ‘ஒருகால் சொன்னால்’ என்று தொடங்கி.
|