முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
2

ஒன

ஒன்று பொன்னாய் இருக்குமாறு போலே அவர்களிலே ஒருவராக இருக்கிற தாம், அவர்களையும் திருத்தும்படி தமக்குப் பிறந்த நன்மைக்கு ‘அடி என்?’ என்று பார்த்து, அதற்குக் காரணம் தம்பக்கல் ஒன்றும் காணாமையாலே தன்னுடைய 1நிர்ஹேதுகமான கிருபையாலே செய்தானத்தனை என்கிறார் இத் திருவாய்மொழியில். என்றது, 2‘அநாதிகாலம் பிறந்து இறந்து புத்தி பூர்வம் விரும்புவது ஐம்புல இன்பங்களையேயாய், தன்பக்கலில் எனக்குள்ளது மனத்தொடு படாத வார்த்தைகளேயாயிருக்க, நான் புத்தி பூர்வம் செய்து போந்த பிராதிகூல்யங்களை மறந்து, ஞானம் பிறந்த பின்பு என்னை அறியாமலே செய்து போந்தவற்றில் அஜ்ஞனாய், என்னை இவ்வளவாக அங்கீகரித்தான்; பிறரையும் யான் திருத்த வல்லேனாம்படி செய்தான்’ என்று தாம் பெற்ற பேற்றின் கனத்தைச் சொல்லி ஈடுபட்டு அநுபவிக்கிறார் என்றபடி.

    3
பகவானுடைய பரத்துவ ஞானத்தைத் தம் நெஞ்சிலே படுத்தினபடியையும், அதற்கு உறுப்பாய் இருப்பது ஒரு நன்மை தமக்கு இன்றிக்கே இருந்தபடியையும், அநாதி காலம் தாம் விபரீதங்களையே செய்து போந்தபடியையும்,

_______________________________________________

1. இத்திருவாய்மொழியில் வருகின்ற “விதிவாய்க்கின்று காப்பார் ஆர்?”
  என்ற பாசுரப் பகுதியைத் திருவுள்ளம்பற்றி ‘நிர்ஹேதுகமான’ என்கிறார்.

2. நிர்ஹேதுகம்’ என்றால், எல்லார்க்கும் இத்திருவருள் கூடவேண்டுமேயன்றோ?
  அங்ஙனம் இல்லை ஆதலின், ஒரு காரணம் பற்றியே கிருபை செய்தான்
  என்று கொண்டால் என்னை? எனின், அதற்கு விடை அருளிச் செய்கிறார்
  ‘அநாதி காலம்’ என்று தொடங்கி. “பொய்யே கைம்மை சொல்லி”
  என்றதனைத் திருவுள்ளம்பற்றித் ‘தன் பக்கலில் எனக்குள்ளது மனத்தொடு
  படாத வார்த்தைகளேயாயிருக்க’ என்றும், “அவன் என்னாகி ஒழிந்தான்”
  என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘நான் புத்தி பூர்வம்’ என்று தொடங்கியும்
  அருளிச் செய்கிறார். ‘ஞானம் பிறந்த பின்பு என்னை அறியாமலே செய்து
  போந்தவற்றில் அஜ்ஞனாய்” என்றது, “காப்பாரார்” என்ற பாசுரத்தைத்
  திருவுள்ளம்பற்றித் “மெய்யே பெற்றொழிந்தேன்” என்றதனைத்
  திருவுள்ளம்பற்றித் ‘தாம் பெற்ற பேற்றின் கனத்தைச் சொல்லி’ என்கிறார்.

3. இத்திருவாய்மொழியில் சொல்லப்பட்ட பொருள்களை விவரிக்கிறார்
  ‘பகவானுடைய’ என்று தொடங்கி. “கையார் சக்கரத்து”, “அம்மான்
  ஆழிப்பிரான்” என்ற பாசுரங்களைத் திருவுள்ளம்பற்றிப் ‘பகவானுடைய
  பரத்துவ ஞானத்தை’ என்று தொடங்கியும். “பொய்யே கைம்மை சொல்லி”
  என்றதனைத் திருவுள்ளம்பற்றி,