முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
200

New Page 1

குமே - 1“அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்று இன்னாதானாள் முன்னர், உலகத்தை அடைய இன்னாதாம்படி காணும் அதற்குப் பின்பு பிறந்த தசாவிசேடம். 2பிரிந்தவனோடு ஒத்ததே இந்த உலகம்!

(10)

486

        உறங்கு வான்போல் யோகுசெய்த பெருமானைச்
        சிறந்த பொழில்சூழ் குருகூர்ச் சடகோ பன்சொல்
        நிறங்கி ளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
        இறந்துபோய் வைகுந்தம் சேராவாறு எங்ங னேயோ?


    பொ-ரை :-
உறங்குவான் போன்று யோகு செய்த பெருமானை, சிறந்த சோலைகளாற்சூழப்பட்ட திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட பண்ணோடு விளங்குகின்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்துப் பாசுரங்களால் இச்சரீரத்தைவிட்டு நீங்கி அர்ச்சிராதி மார்க்கமாகச் சென்று பரமபதத்தில் சேராமல் இருப்பது எப்படி? என்கிறாள்.

    ஈடு :-
முடிவில், 3இவர் பாசுரம் கேட்டார், இவர் தசையை அநுசந்தித்தார் பிழையார்கள் என்கிறார். முடிந்தார் புகலிடம் அதுவாகையாலே சொன்ன இத்தனை.

    உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை - 4அவன் வரவு தாழ்க்கையாலே ‘நம்மை மறந்து உறங்குகிறானோ’ என்று சொன்ன இத்தனை, அவன் உறங்கு

____________________________________________________

1. வேண்டியவர்களை அன்றோ வெறுப்பது, உலகத்தாரை வெறுப்பது என்?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அன்னையரும்’ என்று தொடங்கி.

2. “உலகோ” என்றதிலுள்ள ஓகாரத்திற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘பிரிந்தவனோடு’ என்று தொடங்கி.

3. “இப் பத்தால் இறந்துபோய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ”
   என்றதற்குக் கூறும் இருவகைப் பொருள்களில், முதற்பொருளிலே
   நோக்காக அவதாரிகை அருளிச்செய்கிறார். இவர் தசையை
   அநுசந்திப்பார்களே, ஆகையாலே, ‘பிழையார்கள்’ என்கிறார். ஆனால்,
   பரமபதம் அடைதலைப் பலமாகச் சொல்லுவான் என்? என்னில், ‘முடிந்தார்
   புகலிடம்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. இங்கு, “உறங்குவான்போல்” என்று உறங்காமையைச் சொல்லுகிற இது, மேல்
  “பாம்பணையான்” என்று தம்மை மறந்து உறங்கினானாகச் சொன்னதோடு
  மாறு ஆகாதோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அவன் வரவு
  தாழ்க்கையாலே’ என்று என்று தொடங்கி.