|
த
திருவாய்மொழிக்கும் வேற்றுமை
என்? என்னில், அதில், “இணைக் கூற்றங்கொலோ” என்றும், “உய்விடம் ஏழையர்க்கும்
அசுரர்க்கும் அர்க்கர்கட்கும் எவ்விடம்” என்றும் பாதகத்தன்மை உறைத்திருக்கும்; இதில், மேலே
உண்டான துக்கம் நீங்குதல் உண்டாம்படி நினைத்துத் தரிக்கவும் பெற்று, அதுதான் அநுபவமாகப் பெறாமையாலே
வந்த பிரீதி இன்மையுமாய், இப்படிப் பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகிறதாக
இருக்கும். 1ஜாபாலி பகவானும் வார்த்தை சொல்லி, ‘ஸ்ரீ வசிஷ்ட பகவானும் இக்குடியில்
போந்த படிகள் எல்லாவற்றையும் சொல்லி, இனி மீண்டு திருவபிடேகம் செய்துகொள்ள அமையும் என்ன,
பெருமாள் ‘அங்ஙனம் செய்வது இல்லை’ என்று முடிய நின்றபடியைக் கண்டவாறே, நகரத்து ஜனங்கள் எல்லாம்
உகப்பது செய்தார்கள், வெறுப்பதும் செய்தார்கள்; ‘ரக்ஷகனானவன் தொடங்கின காரியத்திலே இப்படி
முடிய நின்ற இடம் நம்முடைய ரக்ஷணத்துக்கும் உண்டே அன்றோ’ என்று உகப்பதும் செய்தார்கள்;
‘அதனாலே நாம் பெற்றது என்? இப்போது பதினான்காண்டு இழந்திருக்கும்படி வேண்டி இருந்ததே!’ என்று
வெறுப்பதும் செய்தார்களே அன்றோ. பிராட்டியைத் திருவடி தொழுதபோது, ‘நாம் இலங்கையை அடைவதற்குரிய
ஆற்றல் உண்டாகப்பெற்றோமே அன்றோ’ என்று உகப்பதும் செய்தான், ‘இவள் அவரைப் பிரிந்து இந்த
நிலையில் இருப்பதே!’ என்று வெறுப்பதும் செய்தான். பிராட்டி, திருவடி வார்த்தையைக் கேட்டபோது
2“வாநர! உன்னால் சொல்லப்பட்ட பெருமாள் என்னை அல்லது அறியார், பிரிவாலே
தளர்கின்றார் என்ற இரண்டு வார்த்தைகளும் விஷத்தோடு கூடின அமுதம் போல்
_____________________________________________________
1. பிரீதியும் பிரீதி இன்மையுமாகிற
மாறுபட்ட இரண்டு தர்மங்களுக்கு ஒரே
தர்மியில் ஏகதைவ ஸமாவேசம் கூடுமோ? என்ன, அதற்கு மூன்று
உதாரணங்கள் மூலமாக விடை அருளிச்செய்கிறார் ‘ஜாபாலி பகவானும்’
என்று தொடங்கி. முதல் உதாரணம்,
‘ஜாபாலி’ என்று தொடங்குவது.
இரண்டாவது உதாரணம், ‘திருவடி’ என்று தொடங்குவது. ‘பிராட்டி’ என்று
தொடங்குவது மூன்றாவது உதாரணம்.
2. “அம்ருதம் விஷஸம்ஸ்ருஷ்டம்
த்வயா வாநர பாஷிதம்
யச்ச நாந்யமநா
ராமோ யச்ச ஸோக பராயண:”
என்பது, ஸ்ரீராமா. சுந். 37
: 2.
|