|
அகப
அகப்பட்டபடியைச்
சொல்லுகிறாள் மேல்: சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனிவாய் ஒன்றினோடும்
செல்கின்றது என் நெஞ்சமே - 1இதனால், நீங்கள் ஹிதம் சொல்லுவது நெஞ்சுடையார்க்கன்றோ
என்கிறாள் என்றபடி.
சங்கினோடும் -
“செங்கமல நாண்மலர்மேல் தேன் நுகரும் அன்னம்போல்” என்கிறபடியே, கருநிறமான திருமேனிக்குப்
பரபாகமான வெளுத்த நிறத்தையுடைத்தான ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடும், நேமியோடும் - இந்தக்கைக்கு இது
ஆபரணமானால், வேறு ஒன்று வேண்டாதே தானே ஆபரணமாகப் போரும்படி இருக்கிற திருச்சக்கரத்தோடும்,
தாமரைக்கண்களோடும் - மலர்ச்சி முதலியவைகளால் தாமரை போன்று இருக்கிற திருக்கண்களோடும்,
இதனால், 2கண் காணக் கைவிட்டுப் போயிற்றுக் காணும். செம்கனிவாய் - கண்டபோது,
நான் உன் சரக்கு அன்றோ, “தவாஸ்மி-உன்னுடையவன் ஆகிறேன்” என்ற முறுவலோடும், ஒன்றினோடும்
- 3சம்சார யாத்திரையை முக்தன் மறக்குமாறு போலே, இவ்வருகுண்டானவற்றோடு அவ்வருகுள்ளவற்றோடு
வேற்றுமை அற எல்லாவற்றையும் மறக்கும்படி செய்ய வல்லதான திரு அதரத்தோடும். 4அன்றிக்கே,
சாதி, பொருள்கள்தோறும் நிறைந்து இருக்குமாறு போலே, நெஞ்சு அழகுதோறும் சொல்லாநின்றது
_____________________________________________________
1. “செல்கின்றது என் நெஞ்சமே”
என்றதிலே நோக்காக, ‘இதனால்’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார். “செங்கமல நாண் மலர்”
என்பது, நாய்ச்சியார்
திருமொழி. பரபாகம்-பல நிறங்கள் கலத்தலால் உண்டாகும் சோபை.
2. ‘கண் காணக் கைவிட்டுப்
போயிற்று’ என்றது, சிலேடை: திருக்கண்களை
காண என்பது, நேர்பொருள். பிரத்யக்ஷமாக என்பது, தொனிப்பொருள்.
திருக்கைகளை விட்டுப்போயிற்று என்பது, நேர்பொருள். விட்டுப்போயிற்று
என்பது, தொனிப்பொருள்.
3. “ஒன்றினோடும்” என்பதனை,
“செங்கனிவாய்” என்றதனோடு மட்டும்
சேர்த்து, பாவம் அருளிச்செய்கிறார் ‘சம்சார யாத்திரையை’
என்று தொடங்கி.
இவ்வருகுண்டானவை-சங்கும் நேமியும். அவ்வருகுண்டானவை-
திருவதரத்துக்கு மேலேயுள்ள
தாமரைக்கண்கள்.
4.
“ஒன்றினோடும்” என்றதனை, சங்கு முதலானவற்றினோடும் கூட்டி வேறும்
ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
|