|
ப
படியான அழகு. திருக்குறுங்குடி
நம்பியை-பரத்துவத்தில் முதன்மையிலேயோ அகப்பட்டது மீளுகைக்கு. 1நம்பியை-குணங்களில்
நிறைவின்மை உண்டாய்த்தான் மீளுகிறதோ. நான் கண்டபின்-இவ்விஷயத்தில் ஆசை இல்லாமல்
மீளுகிறேனோ. சங்கினோடும்-2 ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடே விசேடித்து ஒரு சம்பந்தம் உண்டுகாணும்
இவளுக்கு; திருவாயின் அமிர்த இனிமையை அறிந்திருக்கையாலே; ஒரு கலத்திலே ஜீவிப்பாரைப்
போலே.
(1)
488
என்நெஞ்சினால் நோக்கிக்
காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியைநான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும்
மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்குதோளும்
வந்தெங்கும் நின்றிடுமே.
பொ-ரை :- என்னை முனிந்துகொள்ளாமல் என் நெஞ்சினாலே
அநுபவித்துக் காண்பீராக; தெற்குத் திக்கிலேயுள்ள சிறந்த சோலைகள் சூழ்ந்த திருக்குறுங்குடி என்னும்
திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் பார்த்த பின்னர், மின்னுகின்ற
பூணுநூலும் குண்டலங்களும் திருமார்பில் எழுந்தருளியிருக்கின்ற பெரியபிராட்டியாரும் ஸ்ரீவத்சமும் நிலைபெற்ற
ஆபரணங்களும் நான்கு திருத்தோள்களும் அங்கு அங்கே வந்து நிற்கின்றன.
வி-கு :-
நோக்கிக் காணீர்: நோக்கல் நோக்கம். அநுபவித்து அறிமின் என்பது பொருள். முனியாதே
காணீர் என்க. கண்டபின் எங்கும் நின்றிடும் என்க. திருமறு - அழகிய மறுவுமாம்.
ஈடு :-
இரண்டாம் பாட்டு. 3நம்பியுடைய தோள் அழகும் ஆபரணங்களின் அழகும் எல்லாத் திக்குகளிலும்
நின்று நலிகின்றன என்கிறாள்.
நாங்களும் நம்பியை
அநுபவித்தே பெண் தன்மை கெடாமல் இருக்கின்றிலேமோ? என்ன, என் நெஞ்சினால்
____________________________________________________
1. நம்பி-பூர்ணன்; நிறைந்தவன்.
2. முன்னே சங்கினை
அருளிச்செய்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ
பாஞ்சசன்யத்தோடே’ என்று தொடங்கி.
3. திருப்பாசுரத்தின்
பின் இரண்டு அடிகளையும் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார். “எங்கும் நின்றிடும்” என்றது,
உருவெளிப்பாடு
ஆகையாலே, அது பாதகமானமையைப் பற்ற ‘நலிகின்றன’ என்கிறாள்.
|