முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
217

என

என்னுதல். அன்றிக்கே, “தென்னன் கொண்டும்” என்னுமாறு போலே, பாண்டியனால் கொண்டாடப்படுகின்ற திருக்குறுங்குடி என்னுதல். நான் கண்ட பின் - 1ஆபரணச் சேர்த்தியையும் சோலையின் சிறப்பையும் அறிந்த நான் கண்ட பின். மின்னுநூலும் - மேகத்தில் மின்னியது போன்றிருக்கின்ற திரு யஜ்ஞோபவீதமும். குண்டலமும்-பரந்த மின் ஓரிடத்திலே சுழித்தாற்போலே இருக்கிற திருமகரகுண்டலமும். மார்பில் திருமறுவும்-வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கிற ஸ்ரீவத்சமும். மன்னுபூணும் - நாய்ச்சிமாரோடு கலக்கும் போதும் கழற்ற வேண்டாதபடி இருக்கிற ஆபரணங்களும். என்றது, மிகுந்த சுகத்தைக் கொடுக்கக்கூடியதாயிருத்தலைக் குறித்தபடி. நான்கு தோளும்-2“எல்லா ஆபரணங்கட்கும் அழகினைக் கொடுக்கக் கூடியதான” என்கிறபடியே, ஆபரணங்கட்கு ஆபரணமாய்க் கல்பகதரு பணைத்தாற் போலே இருக்கிற திருத்தோள்கள் நான்கும். வந்து எங்கும் நின்றிடும் - ‘உங்கள் ஹிதவசனத்தின்படியே செய்ய வேணும்’ என்று நான் கடக்க நிற்கவும், அங்கேயும் பலவகையாக வாராநின்றன. 3“மரவுரி, மான்தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராமபிரானை, பாசக்கயிற்றைக் கையிலேயுடைய யமனைப்போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே, உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய்விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் 4காணீர்கோள்.

(2)

_____________________________________________________

1. பாசுரத்தில் மேலும் கீழும் கடாக்ஷித்து “நான்” என்பதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘ஆபரணச் சேர்த்தியையும்’ என்று தொடங்கி.

2. “ஸர்வபூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா:”
 
  என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3: 15.

3. “வ்ருக்ஷே வ்ருக்ஷேச பஸ்யாமி சீர கிருஷ்ணாஜிநாம்பரம்
   க்ருஹீத தநுஷம் ராமம் பாஸஹஸ்தம் இவஅந்தகம்”

  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 39 : 14. இராவணனைப் பார்த்து மாரீசன் கூறியது.
  மாரீசன் கூற்றுக்குக் காரணம், அச்சம். இங்கே, “எங்கும் நின்றிடும்”
  என்பதற்குக் காரணம், ஈடுபாடு.

4. “அன்னைமீர்” என்று, உபாய அத்யவசாய நிஷ்டரைச்
   சொல்லுகிறதாகையாலே, “அறிவரிய பிரானை” என்றவிடத்திற்போலே,
   த்வரா நிஷ்டராய் மங்களாசாசனபாரான தம்முடைய நினைவாலே
   அவர்களை அஜ்ஞராக நினைத்து, “என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்”
   என்கிறார் என்று இப்பாசுரத்திற்குச் சுவாபதேசப்பொருள் அருளிச் செய்வர்.