முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
218

489

489

    நின்றிடும் திசைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
    குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
    வென்றி வில்லும் தண்டும்வாளும் சக்கரமும் சங்கமும்
    நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.

   
பொ-ரை :- செயல் அற்று நிற்பாள், பின் அறிவு கலங்குவாள், பின் வருந்துவாள் என்று தாய்மாராகிய நீங்களும் முனியாநின்றீர்கள்; மலைகளைப்போன்று மாடங்கள் உயர்ந்து காணப்படுகின்ற திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்னர், வெற்றி பொருந்திய வில்லும் தண்டமும் வாளும் சக்கரமும் சங்கமும் ஒருபடிப்பட நின்று கண்களுள் தோன்றி நீங்குகின்றன இல்லை; நெஞ்சுக்குள்ளேயும் நீங்குகின்றன இல்லை. என் செய்வேன்?

    வி-கு :-
என்று முனிதிர்: கண்டபின் கண்ணுள் நீங்கா, நெஞ்சுளும் நீங்கா என்க.

    ஈடு :-
மூன்றாம் பாட்டு. 1நம்பியுடைய திவ்விய ஆயுதங்களின் சேர்த்தி அழகு, உள்ளும் புறம்பும் ஒக்க எப்பொழுதும் தோன்றாநின்றது என்கிறாள்.

    நின்றிடும் திசைக்கும் கையும் - 2“ஸ்ரீராமபிரானுடைய பாணங்களால் அரக்கர் சேனை அறுக்கப்பட்டதாகவும் பிளக்கப்பட்டதாகவும் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும் கண்டார்கள்” என்கிறபடியே, இராமபாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று, நம்பியுடைய 3அழகுகளும். 4ஒன்று

_____________________________________________________

1. பாசுரத்தின் பின் இரண்டு அடிகளைக் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. “சிந்நம்பிந்நம் ஸரை: தத்தம் ப்ரபக்நம் ஸஸ்த்ரபீடிதம்
   பலம் ராமேண தத்ருஸு: ந ராமம் ஸீக்ர கர்ரிணம்”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.

3. ‘அழகுகளும்’ என்றது, ஆயுதங்களினுடைய சேர்த்தியால் வந்த அழகுகளும்
   என்றபடி.

4. அறிவு குடிபோனால் நையும்படி என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘ஒன்று’ என்று தொடங்கி.