|
ஆ
ஆயுதம் என்று அறியலாவது. “இந்திரன் வில்லுக்கு ஒப்பானவையும்
பகைவர்களைக் கொல்லக்கூடியனவுமான விற்களைப் பிடித்துக்கொண்டு நிற்கின்ற நீங்கள்” என்கிறபடியே,
அநுகூலர் கண்டு ஜீவிக்கைக்கும், பகைவர்களுக்குப் பிடித்த பிடியிலே முடிகைக்கும் காரணமாக இருக்குமன்றோ.
வென்றி வில்லும்-உகப்பாரோடு உகவாதாரோடு வாசி அற வெற்றியே இயல்பாக இருக்கின்ற திருவில்லும்.
தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்-அந்த வில்லின் ஸ்வபாவத்தையுடைத்தான மற்றைய திவ்ய ஆயுதங்களும்.
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா-கண்வட்டத்தை விடாதே நின்று தோன்றாநின்றன. இவை கண்முகப்பே
நின்று நலியப் புக்கவாறே, அஞ்சிக் கண்களைச் 1செம்பளித்தவாறே நெஞ்சுக்குள்ளே
நின்று பிரகாசிக்கத் தொடங்கின. நெஞ்சுள்ளும் நீங்கா - மேலே “வந்து எங்கும் நின்றிடுமே”
என்றாள்; இங்கு உள்ளும் புறம்பும் ஒக்க நலியா நின்றன என்கிறாள். இவற்றிற்கு வாசி என்? என்னில்,
நம்பியுடைய அழகுக்கு உள்ளன எல்லாம் உண்டாயிற்று இவளுக்கும். அவ்வழகு எங்கும் ஒக்க நலிகிறாப்போலே
ஆயிற்று, இவளும் கட்கண்ணாலும் உட்கண்ணாலும் அநுபவிக்கிறபடியும்.
(3)
490
நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று அன்னையரும் முனிதிர்
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண்துழாயும் பொன்முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும்நாணும் பாவியேன் பக்கத்தவே.
பொ-ரை :-
கண்களிலே தண்ணீர் எப்பொழுதும் இருந்து கொண்டே
இருக்கின்றன என்று அன்னையரும் முனிகின்றீர்கள்; தேனைக் கொண்டிருக்கின்ற சோலைகளால் சூழப்பட்ட
திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின், அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையும் பொன் முடியும்
திருமேனியும் அழகாகத் தோன்றுகிற பட்டாடையும் அரைநாணும் பாவியேனாகிய என்னுடைய பக்கங்களிலேயே
இருக்கின்றன.
வி-கு :- நீர்கள் நில்லா என்க. பாங்கு
- தகுதி. நாண் - அரை ஞாண்.
______________________________________________________
1. செம்பளித்தல்-அச்சத்திற்குக் காரணமான பொருள்களைக் கண்டவாறே
கண்களை இடுக்கிக்கொள்ளுதல்.
|